அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2536

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَغَيْرِهِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُقْبَةَ بْنَ عَامِرٍ ‏ ‏عَلَى الْمِنْبَرِ ‏ ‏يَقُولُ: ‏

إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ ‏ ‏يَبْتَاعَ ‏ ‏عَلَى ‏ ‏بَيْعِ ‏ ‏أَخِيهِ وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى ‏ ‏يَذَرَ

“ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துப்) பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2535

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏وَسُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا أَنَّهُمْ قَالُوا ‏ ‏عَلَى ‏ ‏سَوْمِ ‏ ‏أَخِيهِ وَخِطْبَةِ أَخِيهِ

“தம் (முஸ்லிம்) சகோதரனின் விலைக்கு மேல் விலை பேச வேண்டாம்; அவன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (அவளைப்) பெண் பேச வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2534

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يَسُمْ ‏ ‏الْمُسْلِمُ عَلَى ‏ ‏سَوْمِ ‏ ‏أَخِيهِ وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَتِهِ

“ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிம் விலை பேசிக்கொண்டிருக்கும்போது (அதில் குறுக்கிட்டு, அதிக விலை தருவதாக) விலை பேச வேண்டாம். (இதைப் போன்றே) ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துப்) பெண் பேச வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2533

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تَنَاجَشُوا ‏ ‏وَلَا يَبِعْ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ وَلَا يَخْطُبْ الْمَرْءُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلْ الْمَرْأَةُ طَلَاقَ الْأُخْرَى ‏ ‏لِتَكْتَفِئَ ‏ ‏مَا فِي إِنَائِهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏وَلَا يَزِدْ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ

“வாங்கும் எண்ணமின்றி (ஒரு பொருளை) விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (அதில் குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம்; வெளியூரிலிருந்து (விற்பனைப் பொருட்கள் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (அதில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்; ஒரு பெண், தன் சக்களத்தியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ள, அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்க வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, எவரும் (அதில் குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கிவிட வேண்டாம்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2532

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ أَوْ ‏ ‏يَتَنَاجَشُوا ‏ ‏أَوْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ أَوْ يَبِيعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا تَسْأَلْ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا ‏ ‏لِتَكْتَفِئَ ‏ ‏مَا فِي إِنَائِهَا أَوْ مَا فِي ‏ ‏صَحْفَتِهَا ‏


زَادَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي رِوَايَتِهِ وَلَا ‏ ‏يَسُمْ ‏ ‏الرَّجُلُ عَلَى ‏ ‏سَوْمِ ‏ ‏أَخِيهِ

வெளியூரிலிருந்து (பொருட்கள் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (அதை இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும், ஒரு பெண், தன் (முஸ்லிம்) சகோதரியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ள, அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்க வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அம்ருந் நாகித் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் (முஸ்லிம்) சகோதரன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிகமாக) விலை பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2531

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَبِعْ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أَنْ يَأْذَنَ لَهُ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“ஒருவர், தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (அதில் குறுக்கிட்டுப்) பெண் பேச வேண்டாம். முதலாமவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2530

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلَا يَخْطُبْ بَعْضُكُمْ عَلَى خِطْبَةِ بَعْضٍ

“உங்களில் ஒருவர் வியாபாரம் செய்யும்போது, வேறொருவர் (அதில் தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம். உங்களில் ஒருவர் பெண் பேசும்போது, வேறொருவர் (அதில் குறுக்கிட்டுப்) பெண் பேச வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)