அத்தியாயம்: 16, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2533

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تَنَاجَشُوا ‏ ‏وَلَا يَبِعْ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ وَلَا يَخْطُبْ الْمَرْءُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلْ الْمَرْأَةُ طَلَاقَ الْأُخْرَى ‏ ‏لِتَكْتَفِئَ ‏ ‏مَا فِي إِنَائِهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏وَلَا يَزِدْ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ

“வாங்கும் எண்ணமின்றி (ஒரு பொருளை) விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (அதில் குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம்; வெளியூரிலிருந்து (விற்பனைப் பொருட்கள் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (அதில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்; ஒரு பெண், தன் சக்களத்தியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ள, அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்க வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, எவரும் (அதில் குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கிவிட வேண்டாம்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: