அத்தியாயம்: 16, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2546

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ ‏ ‏سَمِعَ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُخْبِرُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الثَّيِّبُ ‏ ‏أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ ‏ ‏تُسْتَأْمَرُ ‏ ‏وَإِذْنُهَا سُكُوتُهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ يَسْتَأْذِنُهَا أَبُوهَا فِي نَفْسِهَا وَإِذْنُهَا صُمَاتُهَا وَرُبَّمَا قَالَ وَصَمْتُهَا إِقْرَارُهَا

“கன்னி கழிந்த பெண், தன் பொறுப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள் ஆவாள். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இபுனு அபீ உமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “கன்னி கழிந்த பெண், தன் பொறுப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள் ஆவாள் கன்னிப் பெண்ணிடம் அவளுடைய தந்தை அவள் தொடர்பாக அனுமதி பெற வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்” என்று இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) சில சந்தர்ப்பங்களில் “அவளது மௌனம் அவளது இசைவாகும்’ என்று கூறினார்கள்.

Share this Hadith: