அத்தியாயம்: 17, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2646

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْوَلَدُ لِلْفِرَاشِ ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ ‏


و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَمَّا ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏فَقَالَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَأَمَّا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏فَقَالَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ  ‏ ‏وَقَالَ ‏  ‏زُهَيْرٌ  ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏مَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏وَمَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏أَوْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَمَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை, அப்பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்றாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2645

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

‏اخْتَصَمَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏وَعَبْدُ بْنُ زَمْعَةَ ‏ ‏فِي غُلَامٍ فَقَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي ‏ ‏عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ وَقَالَ ‏ ‏عَبْدُ بْنُ زَمْعَةَ ‏ ‏هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا ‏ ‏بِعُتْبَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَكَ يَا ‏ ‏عَبْدُ ‏ ‏الْوَلَدُ لِلْفِرَاشِ ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ ‏ ‏وَاحْتَجِبِي مِنْهُ يَا ‏ ‏سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ ‏


قَالَتْ فَلَمْ يَرَ ‏ ‏سَوْدَةَ ‏ ‏قَطُّ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَوْلَهُ يَا ‏ ‏عَبْدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏مَعْمَرًا ‏ ‏وَابْنَ عُيَيْنَةَ ‏ ‏فِي حَدِيثِهِمَا الْوَلَدُ لِلْفِرَاشِ وَلَمْ يَذْكُرَا ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் முரண்பட்டனர்.

ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் அறுதியிட்டுக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதைக் கூர்ந்து பாருங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டார்கள். எனினும், (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), “அப்தே! அவன் உமக்குரியவனே. ஒருவருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண் பெற்றெடுக்கும் குழந்தை, அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” எனக் கூறினார்கள்.

பிறகு (தம் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களிடம்), “ஸவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் ஹிஜாபைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு ஸவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்), “அப்தே!” என்று அழைத்தது இடம்பெறவில்லை.

மஅமர் (ரஹ்) மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்புகளில் “விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” என்னும் இறுதிக் குறிப்பு இடம்பெறவில்லை.

அன்னை ஸவ்தா (ரலி), அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆவார்