அத்தியாயம்: 17, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2649

‏و حَدَّثَنَاه ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏دَخَلَ ‏ ‏قَائِفٌ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَاهِدٌ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏وَزَيْدُ بْنُ حَارِثَةَ ‏ ‏مُضْطَجِعَانِ فَقَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الْأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ فَسُرَّ بِذَلِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَعْجَبَهُ وَأَخْبَرَ بِهِ ‏ ‏عَائِشَةَ ‏


و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمْ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَكَانَ ‏ ‏مُجَزِّزٌ ‏ ‏قَائِفًا

நபி (ஸல்) என் வீட்டிலிருந்தபோது, அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணர் ஒருவர் வந்தார். அப்போது, உஸாமா பின் ஸைத் அவர்களும் (அவரின் தந்தை) ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த நிபுணர் (இருவரின் பாதங்களையும் பார்த்து), ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது’ என்று சொன்னார். அதனால் நபி (ஸல்) மகிழ்ச்சியடைந்து, அவரைக் கண்டு வியந்தார்கள். மேலும், அதை எனக்குத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “முஜஸ்ஸிஸ் என்பவர், அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணராக இருந்தார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

தந்தை ஸைத் (ரலி) நன்கு சிவந்த நிறமுடையவராகவும் மகன் உஸாமா (ரலி) நிறம் குறைந்தவராகவும் இருந்ததால், மக்கா வாழ் குரைஷியர் உஸாமாவின் பிறப்பைக் குறித்து இளக்காரமாகப் பேசிவந்தனர். அதனால் நபி (ஸல்) வேதனை அடைந்திருந்தார்கள். முஜஸ்ஸிஸின் தெளிவான கூற்றால் நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை விலகி, மகிழ்ச்சி உண்டானது! பனூ முத்லிஜ் குலத்தைச் சேர்ந்த முஜஸ்ஸிஸ் என்பார், சாயல் மூலம் உறவு முறை அறியும் நிபுணர் என்பதை மக்கத்தவர் அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

Share this Hadith: