அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2655

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏وَخَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

‏مِنْ السُّنَّةِ أَنْ يُقِيمَ عِنْدَ الْبِكْرِ سَبْعًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ شِئْتُ قُلْتُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் (தாம் மணந்த) கன்னிப் பெண்ணிடம் (தொடர்ச்சியாக) ஏழு நாட்கள் தங்குவது நபிவழியாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்கள் என்று நான் சொல்ல நாடி, அவ்வாறு சொன்னால் அது மிகையில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2654

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

‏إِذَا تَزَوَّجَ الْبِكْرَ عَلَى ‏ ‏الثَّيِّبِ ‏ ‏أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَإِذَا تَزَوَّجَ ‏ ‏الثَّيِّبَ ‏ ‏عَلَى الْبِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ قُلْتُ إِنَّهُ رَفَعَهُ لَصَدَقْتُ وَلَكِنَّهُ قَالَ السُّنَّةُ كَذَلِكَ

ஒருவர் கன்னி கழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, மற்றொரு கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால், (முதலில்) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னி கழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னி கழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்குவார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள் என்று நான் சொல்லலாம். ஆயினும், அனஸ் (ரலி), ‘இதுவே நபிவழியாகும்’ என்று (மட்டுமே) கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் பின் மஹ்ரான் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2653

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ بْنِ أَيْمَنَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏ذَكَرَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَزَوَّجَهَا وَذَكَرَ أَشْيَاءَ هَذَا فِيهِ قَالَ ‏ ‏إِنْ شِئْتِ أَنْ أُسَبِّعَ لَكِ وَأُسَبِّعَ لِنِسَائِي وَإِنْ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏لَكِ سَبَّعْتُ لِنِسَائِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்தார்கள். (அப்போது) அவர்களிடம், “நீ விரும்பினால் நான் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குவேன்; (அதைப் போன்று) என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2652

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏فَدَخَلَ عَلَيْهَا فَأَرَادَ أَنْ يَخْرُجَ أَخَذَتْ بِثَوْبِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنْ شِئْتِ زِدْتُكِ وَحَاسَبْتُكِ بِهِ لِلْبِكْرِ سَبْعٌ وَلِلثَّيِّبِ ثَلَاثٌ ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو ضَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து, அவர்களுடன் தங்கியிருந்தார்கள். (மூன்று நாட்களுக்குப்) பின்னர் நபி (ஸல்) புறப்பட முற்பட்டபோது உம்மு ஸலமா (ரலி), நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்(து இழுத்)தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ விரும்பினால் மேலும் சில நாட்கள் (உன்னுடன்) தங்குவேன். (ஆனால்,) அதை உனது கணக்கில் (கழித்து) வைத்துக்கொள்வேன். ஏழு நாட்கள் கன்னிப் பெண்ணுக்கும், மூன்று நாட்கள் கன்னி கழிந்த பெண்ணுக்கும் உரியவையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2651

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا ‏ ‏لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏عِنْدَكِ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ ثُمَّ دُرْتُ قَالَتْ ثَلِّثْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது, (மறு நாள்) காலையில் தம்முடன் இருந்த உம்மு ஸலமாவிடம், “(உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உனக்கு உன் கணவரால் உனக்கு மதிப்புக் குறைவு என்பதில்லை. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குவேன். நீ விரும்பினால் உன்னிடம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு, (மற்றத் துணைவியர்) ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரலி), “என்னிடம் மூன்று நாட்கள் தங்கியிருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அப்துல் மலிக் பின் அபீபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2650

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا تَزَوَّجَ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا وَقَالَ ‏ ‏إِنَّهُ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ ‏ ‏سَبَّعْتُ ‏ ‏لَكِ وَإِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை மணந்துகொண்டபோது, என்னுடன் மூன்று நாட்கள் தங்கினார்கள். அவர்கள் என்னிடம், “(உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உன் கணவரால் உனக்கு மதிப்புக் குறைவு என்பதில்லை. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குவேன். ஆனால், உன்னிடம் ஏழு நாட்கள் தங்கினால், என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)