அத்தியாயம்: 17, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2656

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ بْنُ سَوَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

‏كَانَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِسْعُ نِسْوَةٍ فَكَانَ إِذَا قَسَمَ بَيْنَهُنَّ لَا يَنْتَهِي إِلَى الْمَرْأَةِ الْأُولَى إِلَّا فِي تِسْعٍ فَكُنَّ يَجْتَمِعْنَ كُلَّ لَيْلَةٍ فِي بَيْتِ الَّتِي يَأْتِيهَا فَكَانَ فِي بَيْتِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَجَاءَتْ ‏ ‏زَيْنَبُ ‏ ‏فَمَدَّ يَدَهُ إِلَيْهَا فَقَالَتْ هَذِهِ ‏ ‏زَيْنَبُ ‏ ‏فَكَفَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدَهُ فَتَقَاوَلَتَا حَتَّى ‏ ‏اسْتَخَبَتَا وَأُقِيمَتْ الصَّلَاةُ فَمَرَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى ذَلِكَ فَسَمِعَ أَصْوَاتَهُمَا فَقَالَ اخْرُجْ يَا رَسُولَ اللَّهِ إِلَى الصَّلَاةِ وَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏الْآنَ يَقْضِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ فَيَجِيءُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَيَفْعَلُ بِي وَيَفْعَلُ فَلَمَّا قَضَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاتَهُ أَتَاهَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَقَالَ لَهَا قَوْلًا شَدِيدًا وَقَالَ أَتَصْنَعِينَ هَذَا

நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அவர்களிடையே (இரவுகளைப்) பங்கிட்டு (ஒவ்வொருவரிடமும் ஓர் இரவு வீதம் தங்கிவந்ததால்), முதலாவது மனைவியிடம் ஒன்பது நாட்களுக்குப் பிறகே நபியவர்கள் திரும்பச் செல்வார்கள். நபியவர்கள் தங்குபவரின் வீட்டில் எல்லாத் துணைவியரும் ஒவ்வோர் இரவிலும் ஒன்றுகூடுவர். (ஓர் இரவில்) ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நபி (ஸல்) இருந்தபோது, ஸைனப் (ரலி) அங்கு வந்திருந்தார்கள். நபி (ஸல்) (ஆயிஷா என்று நினைத்து) ஸைனபிடம் கையை நீட்டினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி), “அவர் ஸைனப்” என்றார்கள். உடனே நபி (ஸல்) தமது கையை விலக்கிக்கொண்டார்கள். இதனால் ஆயிஷா (ரலி) அவர்களும் ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுங்கூட அவ்விருவரும் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த அபூபக்ரு (ரலி) அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று, நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அவர்களின் வாயில் மண்ணைத் திணித்துவிட்டு, நீங்கள் தொழச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி), “இப்போது நபி (ஸல்) தொழுது முடித்ததும், (என் தந்தை) அபூபக்ரு (ரலி) வருவார்கள்; என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) தொழுது முடித்ததும், அபூபக்ரு (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ் சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும், “இப்படித்தான் நடந்து கொள்வாயா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: