அத்தியாயம்: 17, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2660

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ: ‏

‏حَضَرْنَا مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏جَنَازَةَ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسَرِفَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏هَذِهِ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَفَعْتُمْ نَعْشَهَا فَلَا تُزَعْزِعُوا وَلَا تُزَلْزِلُوا وَارْفُقُوا فَإِنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِسْعٌ فَكَانَ يَقْسِمُ لِثَمَانٍ وَلَا يَقْسِمُ لِوَاحِدَةٍ ‏


قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏الَّتِي لَا يَقْسِمُ لَهَا ‏ ‏صَفِيَّةُ بِنْتُ حُيَيِّ بْنِ أَخْطَبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ‏ ‏قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏كَانَتْ آخِرَهُنَّ مَوْتًا مَاتَتْ ‏ ‏بِالْمَدِينَةِ

நபி (ஸல்) அவர்களுடைய மனைவி மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் ‘ஸரிஃப்’ எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் நாங்கள் கலந்துகொண்டோம். அப்போது, “இவர் நபி (ஸல்) அவர்களுடைய மனைவி ஆவார். இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது அலுங்காமல் குலுங்காமல் மெதுவாக(எடுத்து)ச் செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு அவர்கள் (இரவைப்) பங்கிட்டுவந்தார்கள்; ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)


குறிப்பு :

“நபி (ஸல்) இரவைப் பங்கிட்டுக் கொடுக்காத அந்தத் துணைவி, ஸஃபிய்யா பின்த்தி ஹுயை பின் அக்தப் ஆவார்” என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் மதீனாவில் இறந்த அவர்தாம் இறுதியானவர் என அதாஉ (ரஹ்) கூறினார்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 17, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2659

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا كَانَتْ تَقُولُ ‏ ‏أَمَا ‏ ‏تَسْتَحْيِي امْرَأَةٌ تَهَبُ نَفْسَهَا لِرَجُلٍ حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏

” ‏تُرْجِي ‏ ‏مَنْ تَشَاءُ مِنْهُنَّ ‏ ‏وَتُؤْوِي ‏ ‏إِلَيْكَ مَنْ تَشَاءُ “

‏فَقُلْتُ إِنَّ رَبَّكَ لَيُسَارِعُ لَكَ فِي هَوَاكَ

நான், “ஒரு பெண் தன்னைத் தானே ஓர் ஆணுக்குக் கொடையாக வழங்க வெட்கப்பட மாட்டாளா?” என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் “(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் (விரும்பும் காலம்வரை) விரும்பியவர்களை ஒதுக்கிவைக்கலாம்; நீங்கள் விரும்பியவர்களை உங்களுடன் இருக்கவைக்கலாம்” எனும் (33:51ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் நபியவர்களிடம் “உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைந்து நிறைவேற்றுகின்றான்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2658

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كُنْتُ أَغَارُ عَلَى اللَّاتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَقُولُ وَتَهَبُ الْمَرْأَةُ نَفْسَهَا فَلَمَّا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏

‏تُرْجِي ‏ ‏مَنْ تَشَاءُ مِنْهُنَّ ‏ ‏وَتُؤْوِي ‏ ‏إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنْ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ

‏قَالَ قُلْتُ وَاللَّهِ مَا أَرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ لَكَ فِي هَوَاكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே (மஹ்ரின்றி) கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். நான், “ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) அன்பளிப்பாக வழங்கவும் முன்வருவாளோ?” என்று எண்ணியிருந்தேன். “(நபியே! உம் துணைவியரான) அவர்களில் நீங்கள் (விரும்பும் காலம்வரை) விரும்பியவரை ஒதுக்கிவைக்கலாம்; நீங்கள் விரும்பியவர்களை உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை” (33:51) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் நபியவர்களிடம், “உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைந்து நிறைவேற்றுவதை நான் பார்க்கின்றேன்” என்று  சொன்னேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2657

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏مَا رَأَيْتُ امْرَأَةً أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ فِي مِسْلَاخِهَا مِنْ ‏ ‏سَوْدَةَ بِنْتِ زَمْعَةَ ‏ ‏مِنْ امْرَأَةٍ فِيهَا ‏ ‏حِدَّةٌ ‏ ‏قَالَتْ فَلَمَّا كَبِرَتْ جَعَلَتْ يَوْمَهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏قَالَتْ يَا رَسُولَ اللَّهِ قَدْ جَعَلْتُ يَوْمِي مِنْكَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْسِمُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏يَوْمَيْنِ يَوْمَهَا وَيَوْمَ ‏ ‏سَوْدَةَ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ خَالِدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُجَاهِدُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَرِيكٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ ‏ ‏سَوْدَةَ ‏ ‏لَمَّا كَبِرَتْ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏شَرِيكٍ ‏ ‏قَالَتْ وَكَانَتْ أَوَّلَ امْرَأَةٍ تَزَوَّجَهَا بَعْدِي

கூர்மையான அறிவும் திடமான மனமும் கொண்ட ஸவ்தா பின்த்தி ஸம்ஆ (ரலி) அவர்களைத் தவிர, வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் ‘அவர் போல நான் இருக்க வேண்டும்’ என்று நான் விரும்பியதில்லை. ஸவ்தா (ரலி) முதுமை அடைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ஒதுக்கப்பட்ட தமக்குரிய முறை நாளை, ஸவ்தா (ரலி) எனக்கு விட்டுக் கொடுத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஒதுக்கிய (முறை) நாளை நான் ஆயிஷாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்” என்று நபி (ஸல்) அவர்களிடம் ஸவ்தா கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குரிய முறை நாளையும் ஸவ்தா (ரலி) அவர்களுக்குரிய முறை நாளையும் சேர்த்து இரண்டு நாட்களை எனக்கு ஒதுக்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “எனக்குப் பின் நபி (ஸல்) மணந்துகொண்டவர்களில் ஸவ்தா (ரலி) அவர்களே முதல் பெண்மணி ஆவார் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.