அத்தியாயம்: 17, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2624

‏و حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرِيدَ عَلَى ابْنَةِ ‏ ‏حَمْزَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّهَا لَا تَحِلُّ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ وَيَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ ‏ ‏الرَّحِمِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِهْرَانَ الْقُطَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏هَمَّامٍ ‏ ‏سَوَاءً ‏ ‏غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏شُعْبَةَ ‏ ‏انْتَهَى عِنْدَ قَوْلِهِ ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَإِنَّهُ يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏بِشْرِ بْنِ عُمَرَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ زَيْدٍ

ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்), “அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார். மேலும், இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவு, பால்குடி உறவாலும் மணமுடிக்கத் தகாததாகிவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார்” என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘இரத்த உறவு’ என்பதைக் குறிக்க ‘ரஹிம்’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘நஸப் (பரம்பரை)‘ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.