அத்தியாயம்: 18, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2697

‏حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ الْعَدَوِيَّةِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَأْذِنُنَا إِذَا كَانَ فِي يَوْمِ الْمَرْأَةِ مِنَّا بَعْدَ مَا نَزَلَتْ ‏تُرْجِي ‏ ‏مَنْ تَشَاءُ مِنْهُنَّ ‏ ‏وَتُؤْوِي ‏ ‏إِلَيْكَ مَنْ تَشَاءُ

‏فَقَالَتْ لَهَا ‏ ‏مُعَاذَةُ ‏ ‏فَمَا كُنْتِ تَقُولِينَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اسْتَأْذَنَكِ قَالَتْ كُنْتُ أَقُولُ إِنْ كَانَ ذَاكَ إِلَيَّ لَمْ أُوثِرْ أَحَدًا عَلَى نَفْسِي ‏


و حَدَّثَنَاه ‏ ‏الْحَسَنُ بْنُ عِيسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

ஆயிஷா (ரலி), “(நபியே! உங்கள் மனைவியரான) அவர்களுள் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்” எனும் (33:51) இறைவசனம் அருளப்பெற்ற பின்னரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களில் ஒரு மனைவியின் நாளில் (மற்றொரு மனைவி யிடம் செல்ல விரும்பினால் அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி) எங்களிடம் அனுமதி கேட்பார்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களிடம் அனுமதி கேட்கும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்கமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்

Share this Hadith: