அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2712

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏أُخْتَ ‏ ‏الضَّحَّاكِ بْنِ قَيْسٍ ‏ ‏أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّ ‏ ‏أَبَا حَفْصِ بْنَ الْمُغِيرَةِ الْمَخْزُومِيَّ ‏ ‏طَلَّقَهَا ثَلَاثًا ثُمَّ انْطَلَقَ إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ لَهَا أَهْلُهُ لَيْسَ لَكِ عَلَيْنَا نَفَقَةٌ فَانْطَلَقَ ‏ ‏خَالِدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏فِي نَفَرٍ فَأَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏أَبَا حَفْصٍ ‏ ‏طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فَهَلْ لَهَا مِنْ نَفَقَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَتْ لَهَا نَفَقَةٌ وَعَلَيْهَا الْعِدَّةُ وَأَرْسَلَ إِلَيْهَا أَنْ لَا تَسْبِقِينِي بِنَفْسِكِ وَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ‏ ‏أُمِّ شَرِيكٍ ‏ ‏ثُمَّ أَرْسَلَ إِلَيْهَا أَنَّ ‏ ‏أُمَّ شَرِيكٍ ‏ ‏يَأْتِيهَا ‏ ‏الْمُهَاجِرُونَ ‏ ‏الْأَوَّلُونَ فَانْطَلِقِي إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى فَإِنَّكِ إِذَا وَضَعْتِ ‏ ‏خِمَارَكِ ‏ ‏لَمْ يَرَكِ فَانْطَلَقَتْ إِلَيْهِ فَلَمَّا مَضَتْ عِدَّتُهَا أَنْكَحَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَ ‏ ‏كَتَبْتُ ذَلِكَ مِنْ فِيهَا كِتَابًا قَالَتْ كُنْتُ عِنْدَ رَجُلٍ مِنْ ‏ ‏بَنِي مَخْزُومٍ ‏ ‏فَطَلَّقَنِي ‏ ‏الْبَتَّةَ ‏ ‏فَأَرْسَلْتُ إِلَى أَهْلِهِ ‏ ‏أَبْتَغِي النَّفَقَةَ ‏ ‏وَاقْتَصُّوا الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏لَا تَفُوتِينَا بِنَفْسِكِ

அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை (இறுதியான) மூன்று தலாக் சொல்லிவிட்டு யமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கணவரின் குடும்பத்தார் என்னிடம், “உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டியதில்லை” என்று கூறினர். அப்போது (என் கணவருடைய தந்தையின் சகோதரர் மகன்) காலித் பின் அல்வலீத் (ரலி), சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். “அபூஹஃப்ஸு, தம் மனைவியை (இறுதியான) மூன்று தலாக் சொல்லிவிட்டார். (‘இத்தா’விலிருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் ‘இத்தா’ உண்டு” என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, “உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே” என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு,  “உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ (உன் தந்தையின் சகோதரர் மகனான) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ துணி மாற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது” என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது ‘இத்தா’க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) வழியாக அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) அவர்கள் ‘இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவியுற்று எழுதி வைத்துக்கொண்டேன்’ என்று கூறினார்கள் …” என ஆரம்பமாகிறது. மேலும் “ … நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த (இறுதியான) தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம்சத்தைக் கோரினேன் …” என்று ஹதீஸ் தொடருகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஹம்மது பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “உனது (மறுமண) விஷயத்தில் நம்மைவிடுத்து (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: