அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2757

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ أَعْرَابِيًّا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ وَإِنِّي أَنْكَرْتُهُ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ مَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ فَهَلْ فِيهَا مِنْ ‏ ‏أَوْرَقَ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنَّى هُوَ قَالَ لَعَلَّهُ يَا رَسُولَ اللَّهِ يَكُونُ ‏ ‏نَزَعَهُ ‏ ‏عِرْقٌ ‏ ‏لَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهَذَا لَعَلَّهُ يَكُونُ ‏ ‏نَزَعَهُ ‏ ‏عِرْقٌ ‏ ‏لَهُ ‏


و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏بَلَغَنَا ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏كَانَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்துள்ளாள்; அக்குழந்தையை நான் (என் மகன் என ஏற்க மனத்தளவில்) மறுத்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி “ஆம்”’ என்று பதிலளித்தார். நபி (ஸல்), “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர் “சிவப்பு” என்று சொன்னார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் “ஆம்” என்று பதிலளித்தார். “அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு எப்படி வந்தது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உன்னுடைய) இந்த மகனும் அவன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2756

‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي فَزَارَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا مِنْ ‏ ‏أَوْرَقَ ‏ ‏قَالَ إِنَّ فِيهَا ‏ ‏لَوُرْقًا ‏ ‏قَالَ فَأَنَّى أَتَاهَا ذَلِكَ قَالَ عَسَى أَنْ يَكُونَ ‏ ‏نَزَعَهُ ‏ ‏عِرْقٌ ‏ ‏قَالَ وَهَذَا عَسَى أَنْ يَكُونَ ‏ ‏نَزَعَهُ ‏ ‏عِرْقٌ ‏


و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَلَدَتْ امْرَأَتِي غُلَامًا أَسْوَدَ وَهُوَ حِينَئِذٍ يُعَرِّضُ بِأَنْ يَنْفِيَهُ وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ وَلَمْ يُرَخِّصْ لَهُ فِي ‏ ‏الِانْتِفَاءِ ‏ ‏مِنْهُ

பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் மனைவி (எனது நிறத்துக்கு மாற்றமாக) கறுப்பான குழந்தையைப் பிரசவித்துள்ளாள் (அது என் குழந்தையா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது)” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்), “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்), “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்றார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர், “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார். “அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு எப்படி வந்தது?” என்று நபியவர்கள் கேட்க, அவர் “அந்த(த் தாய்) ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்” என்று சொன்னார். நபி (ஸல்), “(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி கறுப்பான மகனைப் பிரசவித்துள்ளாள்’  என்று (அது தன் குழந்தை அல்ல என்பதைப் போன்று சாடையாகக்) கேட்டார்” என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் “அக்குழந்தை தம்முடையவன் அல்லன் என்று மறுக்க அவரை நபி (ஸல்) அனுமதிக்கவில்லை” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2755

‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏كَاتِبِ ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏لَوْ رَأَيْتُ رَجُلًا مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرُ مُصْفِحٍ عَنْهُ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ ‏ ‏سَعْدٍ ‏ ‏فَوَاللَّهِ لَأَنَا أَغْيَرُ مِنْهُ وَاللَّهُ أَغْيَرُ مِنِّي مِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا شَخْصَ أَغْيَرُ مِنْ اللَّهِ وَلَا شَخْصَ أَحَبُّ إِلَيْهِ الْعُذْرُ مِنْ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ اللَّهُ الْمُرْسَلِينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَلَا شَخْصَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنْ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الْجَنَّةَ.


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَقَالَ غَيْرَ مُصْفِحٍ وَلَمْ يَقُلْ عَنْهُ

“என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்க நான் கண்டால், வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ரலி)  சொல்ல, இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது, “ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ்வின் ரோஷம் காரணமாகவே அவன் வெளிப்படையானவையும் மறைவானவையுமான எல்லா மானக்கேடான செயல்களையும் தடை செய்துள்ளான். அல்லாஹ்வைவிட ரோஷக்காரர் வேறெவருமில்லை; (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை விரும்புகின்றவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. ஆகவேதான், (தன்) தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அல்லாஹ் (நல்லோர்களுக்கு) சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2754

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُهَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ‏ ‏لَوْ وَجَدْتُ مَعَ أَهْلِي رَجُلًا لَمْ أَمَسَّهُ حَتَّى آتِيَ بِأَرْبَعَةِ شُهَدَاءَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ قَالَ كَلَّا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنْ كُنْتُ لَأُعَاجِلُهُ بِالسَّيْفِ قَبْلَ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْمَعُوا إِلَى مَا يَقُولُ سَيِّدُكُمْ إِنَّهُ لَغَيُورٌ وَأَنَا أَغْيَرُ مِنْهُ وَاللَّهُ أَغْيَرُ مِنِّي

“அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டும்,  நான்கு சாட்சிகள் கொண்டுவராமல் நான் அவனைத் தொடக் கூடாதா?” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்றார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “இல்லை; தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் தலைவர் என்ன சொல்கின்றார், கேட்டீர்களா? அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்” என்று மக்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2753

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ عُبَادَةَ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏إِنْ وَجَدْتُ مَعَ امْرَأَتِي رَجُلًا أَؤُمْهِلُهُ حَتَّى آتِيَ بِأَرْبَعَةِ شُهَدَاءَ قَالَ نَعَمْ

“அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால் நான்கு சாட்சிகள் வரும்வரை நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டியதுதானா?” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2752

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ عُبَادَةَ الْأَنْصَارِيَّ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يَجِدُ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏بَلَى وَالَّذِي أَكْرَمَكَ بِالْحَقِّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْمَعُوا إِلَى مَا يَقُولُ سَيِّدُكُمْ

ஸஅத் பின் உபாதா அல்அன்ஸாரி (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா, சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கூடாது” என்று பதிலளித்தார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “இல்லை (அவனைக் கொல்லத்தான் தோன்றும்); சத்திய(மார்க்க)த்தால் தங்களைக் கண்ணியப்படுத்தியவன்மீது ஆணையாக!” என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “உங்கள் தலைவர் என்ன சொல்கின்றார், கேட்டீர்களா?” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2751

‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ: ‏

‏وَذُكِرَ ‏ ‏الْمُتَلَاعِنَانِ ‏ ‏عِنْدَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ شَدَّادٍ ‏ ‏أَهُمَا اللَّذَانِ قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ ‏ ‏بَيِّنَةٍ ‏ ‏لَرَجَمْتُهَا ‏


فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏لَا تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي رِوَايَتِهِ عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ

பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) காதுபட பேசப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்), “நபி (ஸல்), ‘நான் சாட்சியல்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்’ என்று கூறியது அவ்விருவர் தொடர்பாகத்தானா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டவள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டுவந்த பெண் ஆவாள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதைக் கேட்டேன் …” என ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2750

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏وَعِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيَّانِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

‏ذُكِرَ ‏ ‏التَّلَاعُنُ ‏ ‏عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏عَاصِمُ بْنُ عَدِيٍّ ‏ ‏فِي ذَلِكَ قَوْلًا ثُمَّ انْصَرَفَ فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ يَشْكُو إِلَيْهِ أَنَّهُ وَجَدَ مَعَ أَهْلِهِ رَجُلًا فَقَالَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏مَا ابْتُلِيتُ بِهَذَا إِلَّا لِقَوْلِي فَذَهَبَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا قَلِيلَ اللَّحْمِ ‏ ‏سَبِطَ ‏ ‏الشَّعَرِ وَكَانَ الَّذِي ادَّعَى عَلَيْهِ أَنَّهُ وَجَدَ عِنْدَ أَهْلِهِ ‏ ‏خَدْلًا ‏ ‏آدَمَ كَثِيرَ اللَّحْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ بَيِّنْ فَوَضَعَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَهُ عِنْدَهَا فَلَاعَنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَهُمَا فَقَالَ رَجُلٌ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏فِي الْمَجْلِسِ أَهِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ ‏ ‏بَيِّنَةٍ ‏ ‏رَجَمْتُ هَذِهِ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏لَا تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ فِي الْإِسْلَامِ السُّوءَ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏ذُكِرَ ‏ ‏الْمُتَلَاعِنَانِ ‏ ‏عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَزَادَ فِيهِ بَعْدَ قَوْلِهِ كَثِيرَ اللَّحْمِ قَالَ ‏ ‏جَعْدًا ‏ ‏قَطَطًا

சுய சாபம் (லிஆன்) வேண்டுதல் (நடைமுறையில் வருவதற்கு முன், மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காதுபட பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அது தொடர்பாக ஏதோ (ஆவேசமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி), “நான் (ஆவேசமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.

பின்னர் ஆஸிம் (ரலி) அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர் தம் மனைவியை எந்த நிலையில் கண்டார் என்பதைப் பற்றித் தெரிவித்தார்கள்.

(குற்றச்சாட்டைக் கொண்டுவந்த) அவர் நல்ல மஞ்சள் நிறமுடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், படிந்த முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்நிய மனிதரோ மாநிறமானவராகவும், அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும், கணைக்கால் புடைத்தவராகவும் இருந்தார்.

(இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைக் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுய சாபம் (லிஆன்) வேண்ட வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “சாட்சி இல்லாமலேயே நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்து கொண்டே தகாத உறவில் ஈடுபடுபவள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு குறிப்பிட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும்” என்பதற்குப் பின் “கடும் சுருள் முடியுடையவராகவும் இருந்தார்”  என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2749

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏وَأَنَا أُرَى أَنَّ عِنْدَهُ مِنْهُ عِلْمًا فَقَالَ إِنَّ ‏ ‏هِلَالَ بْنَ أُمَيَّةَ ‏ ‏قَذَفَ ‏ ‏امْرَأَتَهُ ‏ ‏بِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ ‏ ‏وَكَانَ أَخَا ‏ ‏الْبَرَاءِ بْنِ مَالِكٍ ‏ ‏لِأُمِّهِ وَكَانَ أَوَّلَ رَجُلٍ ‏ ‏لَاعَنَ ‏ ‏فِي الْإِسْلَامِ قَالَ فَلَاعَنَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَبْصِرُوهَا فَإِنْ جَاءَتْ بِهِ أَبْيَضَ ‏ ‏سَبِطًا ‏ ‏قَضِيءَ الْعَيْنَيْنِ ‏ ‏فَهُوَ ‏ ‏لِهِلَالِ بْنِ أُمَيَّةَ ‏ ‏وَإِنْ جَاءَتْ بِهِ ‏ ‏أَكْحَلَ ‏ ‏جَعْدًا ‏ ‏حَمْشَ ‏ ‏السَّاقَيْنِ فَهُوَ ‏ ‏لِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ ‏ ‏قَالَ فَأُنْبِئْتُ أَنَّهَا جَاءَتْ بِهِ ‏ ‏أَكْحَلَ ‏ ‏جَعْدًا ‏ ‏حَمْشَ ‏ ‏السَّاقَيْنِ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் (லிஆன் பற்றிக்) கேட்டேன். (ஏனெனில்,) அதைப் பற்றிய அறிவு அவர்களிடம் இருப்பதாக நான் கருதினேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

ஹிலால் பின் உமய்யா (ரலி), (கர்ப்பவதியான) தம் மனைவிக்கு ஷரீக் பின் ஸஹ்மா என்பாருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். ஷரீக் பின் ஸஹ்மா, பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் (பால்குடி) தாய்வழிச் சகோதரராய் இருந்தார். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களே இஸ்லாத்தில் ஆரம்பமாக ‘லிஆன்’ செய்தவர் ஆவார். ஹிலால் பின் உமய்யா (ரலி) சுய சாபம் (லிஆன்) வேண்டியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தப் பெண்ணைக் கவனித்துவாருங்கள்; இவள் படிந்த தொங்கலான முடியுடைய, கலங்கிய கண்களுடைய வெள்ளை நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஹிலால் பின் உமய்யாவுக்கு உரியதாகும்; சுருட்டை முடியுடைய, மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் ஸஹ்மாவுக்கு உரியதாகும்” என்றார்கள். பின்னர் அப்பெண் சுருட்டை முடியுடைய மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையையே பெற்றெடுத்தாள் என எனக்குத் தகவல் எட்டியது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2748

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏إِنَّا لَيْلَةَ الْجُمُعَةِ فِي الْمَسْجِدِ إِذْ جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالَ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَتَكَلَّمَ جَلَدْتُمُوهُ أَوْ قَتَلَ قَتَلْتُمُوهُ وَإِنْ سَكَتَ سَكَتَ عَلَى غَيْظٍ وَاللَّهِ لَأَسْأَلَنَّ عَنْهُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا كَانَ مِنْ الْغَدِ أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَتَكَلَّمَ جَلَدْتُمُوهُ أَوْ قَتَلَ قَتَلْتُمُوهُ أَوْ سَكَتَ سَكَتَ عَلَى غَيْظٍ فَقَالَ اللَّهُمَّ افْتَحْ وَجَعَلَ يَدْعُو فَنَزَلَتْ آيَةُ ‏ ‏اللِّعَانِ وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُمْ شُهَدَاءُ إِلَّا أَنْفُسُهُمْ

‏هَذِهِ الْآيَاتُ فَابْتُلِيَ بِهِ ذَلِكَ الرَّجُلُ مِنْ بَيْنِ النَّاسِ فَجَاءَ هُوَ وَامْرَأَتُهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏فَشَهِدَ الرَّجُلُ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الصَّادِقِينَ ثُمَّ لَعَنَ الْخَامِسَةَ أَنَّ لَعْنَةَ اللَّهِ عَلَيْهِ إِنْ كَانَ مِنْ الْكَاذِبِينَ فَذَهَبَتْ لِتَلْعَنَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَهْ ‏ ‏فَأَبَتْ فَلَعَنَتْ فَلَمَّا أَدْبَرَا قَالَ ‏ ‏لَعَلَّهَا أَنْ تَجِيءَ بِهِ أَسْوَدَ ‏ ‏جَعْدًا ‏ ‏فَجَاءَتْ بِهِ أَسْوَدَ ‏ ‏جَعْدًا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நாங்கள் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து, “ஒரு கணவர், தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்டு, அவர் (அது குறித்துப்) பேசினால் அவருக்கு நீங்கள் (அவதூறுச் சட்டப்படி) சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்றுவிட்டால், (பழிவாங்கல் சட்டப்படி) அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டுமா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்பேன்” என்று சொன்னார்.

மறுநாள் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்து வினவினார். “தம் மனைவியுடன் (அந்நிய) ஆண் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்ட ஒருவர், (அது தொடர்பாகப்) பேசினால் அவருக்கு நீங்கள் சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்றுவிட்டால், நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மௌனமாக இருந்துவிட வேண்டியதுதானா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! (இந்தப் பிரச்சினையில் தெளிவின் வாசலைத்) திறந்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கலானார்கள். அப்போதுதான் “தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்” (24:6-9) என்று தொடங்கும் சுய சாபம் (லிஆன்) வேண்டுதல் தொடர்பான வசனங்கள் அருளப்பெற்றன.

பின்னர் மக்களில் அவரே (தமது சொந்த வாழ்வில்) அந்தப் பிரச்சினையின் மூலம் சோதிக்கப்பட்டார். எனவே, அவரும் அவருடைய மனைவியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, சுய சாபம் (லிஆன்) வேண்டினர். அந்த ஆண், தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு  நான்கு தடவைகள் சாட்சியமளித்தார். பிறகு ஐந்தாவது தடவையில் அவர் “நான் பொய்யனாயிருந்தால் என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சுய சாபமிட்டார்.

பின்னர் அந்தப் பெண் சுய சாபம் (லிஆன்) வேண்ட ஆரம்பித்தபோது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “சற்று பொறு!” என்றார்கள். ஆனால், அவள் ஏற்காமல் சுய சாபம் (லிஆன்) வேண்டும் சொற்களை மொழிந்தாள். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவள் தொங்கும் முடிகள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடும்” என்றார்கள். அவ்வாறே அப்பெண் தொங்கிய முடியுடைய கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)