அத்தியாயம்: 2, பாடம்: 01, ஹதீஸ் எண்: 328

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطُّهُورُ ‏ ‏شَطْرُ ‏ ‏الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ ‏ ‏أَوْ تَمْلَأُ ‏ ‏مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ ‏ ‏يَغْدُو ‏ ‏فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ ‏ ‏مُوبِقُهَا ‏

“தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்'(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று துதிப்)பது, (நன்மை-தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி'(அல்லாஹ் தூயவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள்-பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை என்பது (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் என்பது சான்றாகும். பொறுமை என்பது வெளிச்சமாகும். குர்ஆன் என்பது உனக்குத் தவிர்க்க முடியாத (ஏவல்) தேவையாகும்; அல்லது எதிரான (விலக்கல்) சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மைத் தாமே விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மையே அழித்துக் கொள்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்-அஷ்அரீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment