அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 376

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُتَوَكِّلِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏حَدَّثَهُ ‏
‏أَنَّهُ بَاتَ عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَقَامَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ آخِرِ اللَّيْلِ فَخَرَجَ فَنَظَرَ فِي السَّمَاءِ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ فِي ‏ ‏آلِ ‏ ‏عِمْرَانَ ‏
‏إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ ‏ ‏حَتَّى بَلَغَ ‏ ‏فَقِنَا عَذَابَ النَّارِ ‏

‏ثُمَّ رَجَعَ إِلَى الْبَيْتِ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ ثُمَّ قَامَ فَخَرَجَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَتَلَا هَذِهِ الْآيَةَ ثُمَّ رَجَعَ فَتَسَوَّكَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَصَلَّى ‏

நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களில் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள்.

பிறகு, “திண்ணமாக வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் …” என்று தொடங்கி “நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக” என்ற ஆலு இம்ரான் (3ஆவது)அத்தியாயத்தின் (190,191) வசனங்களை ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்து பல்துலக்கி, அங்கத் தூய்மை (உளூச்) செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். பிறகு எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி அதே (3:190,191) வசனங்களை ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி, உளூச் செய்தார்கள். பின்னர் நின்று தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment