அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 543

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلَاةٌ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏مِنْ الصَّدَقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا قَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏
‏حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِنَحْوِ رِوَايَةِ ‏ ‏يُونُسَ

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு, “நீங்கள் இதன் தோலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், “இது செத்துப் போனதாயிற்றே?” என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “செத்ததை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 27, ஹதீஸ் எண்: 422

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏سَمِعَ ‏ ‏مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ الْمُغَفَّلِ ‏ ‏قَالَ ‏
‏أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ وَقَالَ ‏ ‏إِذَا ‏ ‏وَلَغَ ‏ ‏الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ ‏ ‏وَعَفِّرُوهُ ‏ ‏الثَّامِنَةَ فِي التُّرَابِ ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي رِوَايَةِ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏مِنْ الزِّيَادَةِ وَرَخَّصَ فِي كَلْبِ الْغَنَمِ وَالصَّيْدِ وَالزَّرْعِ وَلَيْسَ ذَكَرَ الزَّرْعَ فِي الرِّوَايَةِ غَيْرُ ‏ ‏يَحْيَى ‏

“நாய்களைக் கொன்று விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டிருந்தார்கள். பின்னர், “நாய்களுக்கும் மனிதர்களுக்கும் (பெரும்பகை) ஒன்றுமில்லை” என்று கூறிவிட்டு, வேட்டை நாய்களுக்கும் ஆட்டுக்கிடைகளுக்கான காவல் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். கூடவே, “நாய் நக்கிய பாத்திரத்தை ஏழு தடவை (நீரால்) கழுவியதன் பின் எட்டாவது தடவையாக மண்ணால் தேய்த்தும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாள் : அப்துல்லாஹ் பின் அல் முகஃப்பல் (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸ், யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “… விவசாயப் பண்ணைகளின் காவல் நாய்களுக்கும் …” விலக்கு அளித்ததாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 27, ஹதீஸ் எண்: 421

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏ ‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا ‏ ‏وَلَغَ ‏ ‏الْكَلْبُ فِيهِ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ ‏

“உங்களுள் நாய் நக்கி விட்ட ஒருவரது பாத்திரத்தை அவர் ஏழு தடவை கழுவ வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்).

குறிப்பு:

“முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகிறார்.

அத்தியாயம்: 2, பாடம்: 27, ஹதீஸ் எண்: 420

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا ‏ ‏وَلَغَ ‏ ‏فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ ‏

“உங்களுள் நாய் நக்கிய ஒருவரது பாத்திரத்தை அவர் முதல் தடவை மண்ணால் தேய்த்தும் பின்னர் ஆறு தடவை நீராலும் சுத்தம் செய்யட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 27, ஹதீஸ் எண்: 419

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ ‏

“உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் நக்கிக் குடித்து விடுமானால் அந்தப் பாத்திரத்தை அவர் ஏழு முறை கழுவிக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 27, ஹதீஸ் எண்: 418

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَزِينٍ ‏ ‏وَأَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏وَلَغَ ‏ ‏الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ ‏ ‏فَلْيُرِقْهُ ‏ ‏ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَلَمْ يَقُلْ ‏ ‏فَلْيُرِقْهُ ‏

“உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் நக்கி விட்டால் பாத்திரத்தில் இருந்த பொருளைத் தூர வீசிவிட்டு, ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸின் இஸ்மாயீல் பின் ஸக்கரிய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “… பாத்திரத்தில் இருந்த பொருளைத் தூர வீசிவிட்டு …” என்ற சொற்கள் இடம்பெறவில்லை.