அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 433

و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ ‏ ‏وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهِيَ أُخْتُ ‏ ‏عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ ‏ ‏أَحَدُ ‏ ‏بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ ‏ ‏قَالَ ‏
‏أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ ‏ ‏بَالَ فِي ‏ ‏حَجْرِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَاءٍ ‏ ‏فَنَضَحَهُ ‏ ‏عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلًا ‏

திடஉணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் குழதையுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள்; அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்).

குறிப்பு:

இந்த அறிவிப்பில் உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) என்ற நபித்தோழியைப் பற்றி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தவர்; ஆரம்பத்தில் நாடு துறந்து ஹிஜ்ரத் சென்ற பெண்மணிகளுள் ஒருவர்; பனூ அஸத் பின் குஸைமா குலத்தைச் சேர்ந்த உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி” என்று அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் சிறப்பு அறிமுகம் செய்கிறார்.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 432

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ ‏
‏أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَأْكُلْ الطَّعَامَ فَوَضَعَتْهُ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَبَالَ قَالَ فَلَمْ يَزِدْ عَلَى أَنْ ‏ ‏نَضَحَ ‏ ‏بِالْمَاءِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடஉணவு உட்கொள்ளாத என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு வந்து அவர்களது மடியில் வைத்தேன். அவர்கள் மீது குழந்தை சிறுநீர் கழித்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுநீர் பட்ட இடத்தில்) தண்ணீரைத் தெளித்து விட்டதைத் தவிர கூடுதலாக ஏதும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி).

குறிப்பு:

இபுனு உஅய்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “… தண்ணீர் கொண்டுவரச் சொல்லித் தெளித்துக் கொண்டார்கள்” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 431

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِصَبِيٍّ يَرْضَعُ ‏ ‏فَبَالَ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால்குடி மாறாத ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 430

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُؤْتَى بِالصِّبْيَانِ ‏ ‏فَيُبَرِّكُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏وَيُحَنِّكُهُمْ ‏ ‏فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அக்குழந்தைகளின் அருள்வளத்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் (மட்டும்) தண்ணீரைத் தெளித்தார்கள்; (முற்றாகக்) கழுவவில்லை.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).