அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 334

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَلَكِنْ ‏ ‏عُرْوَةُ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا تَوَضَّأَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏قَالَ ‏
‏وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا وَاللَّهِ لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الصَّلَاةَ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏
‏قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏الْآيَةُ ‏ ‏إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏اللَّاعِنُونَ ‏

உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படாமலிருப்பதில்லை”.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

குறிப்பு:

உஸ்மான் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிட்டது, “தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும் நாம் அருளியதோடு, அவற்றை வேதத்தில் நாம் விளக்கிய பின்னரும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; அவர்களை சபிப்ப(தற்கு உரிய)வர்களும் சபிக்கிறார்கள்” என்ற (2:159ஆவது) வசனம்தான் என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment