அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2835

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ وَعَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ ‏


قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏بَيْعِ الْعَرَايَا ‏ ‏زَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنْ تُبَاعَ

நபி (ஸல்), உண்ணும் பக்குவம் அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அராயா$ வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள்.

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில் “அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

$அராயா
கொடையுள்ளம் கொண்ட தோட்ட உரிமையாளர், தன் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தின் பழங்களை ஓர் ஏழைக்கு அல்லது ஏழைக் குடும்பத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அந்த மரத்தின் பழங்கள் பழுத்து, பறிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை அந்த ஏழை, தன் தேவை கருதி ஏற்கனவே பறிக்கப்பட்ட உலர்ந்த பழங்களுக்குப் பண்டமாற்றுச் செய்துகொள்வார். இவ்வகைப் பண்டமாற்றுக்கு ‘அராயா’ என்று பெயர்.

Share this Hadith: