அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2837

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏


وَالْمُزَابَنَةُ ‏ ‏أَنْ يُبَاعَ ثَمَرُ النَّخْلِ بِالتَّمْرِ وَالْمُحَاقَلَةُ أَنْ يُبَاعَ الزَّرْعُ بِالْقَمْحِ ‏ ‏وَاسْتِكْرَاءُ ‏ ‏الْأَرْضِ بِالْقَمْحِ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا تَبْتَاعُوا الثَّمَرَ بِالتَّمْرِ ‏ ‏و قَالَ ‏ ‏سَالِمٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَخَّصَ بَعْدَ ذَلِكَ فِي ‏ ‏بَيْعِ الْعَرِيَّةِ ‏ ‏بِالرُّطَبِ أَوْ بِالتَّمْرِ وَلَمْ يُرَخِّصْ فِي غَيْرِ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’&  மற்றும் ‘முஹாகலா’# ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் அல் முஸய்யப்


குறிப்புகள் :

விலக்குப் பெற்றது:
அராயா$ : ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க.

தடுக்கப்பட்டது:
‘முஸாபனா’& = பேரீச்ச மரத்திலுள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக பண்டமாற்றி / விற்றுக் கொள்வது.

தடுக்கப்பட்டது:
‘முஹாகலா’# = அளவு அறியப்படாத – கோதுமைக் கதிரிலுள்ள தானியத்தை, அறுவடை செய்யப்பட்ட கோதுமைக்கு விற்பதும் அறுவடை செய்யப்பட்ட கோதுமைக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதும்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘செங்கனிகள் முற்றிப் பழுக்காத வரை அவற்றை விற்காதீர்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை விற்காதீர்கள்’ என்று சொன்னார்கள்’ என ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பேரீச்ச மரத்திலுள்ள) செங்காய்களுக்குப் பதிலாக உலர்ந்த அல்லது கொய்யப்பட்ட செங்கனியான பேரீச்சங்கனிகளை மாற்றிக் கொள்வதற்கு ‘அராயா’வில் (மட்டும்) அனுமதியளித்தார்கள்; ‘அராயா’ அல்லாதவற்றில் அனுமதியளிக்கவில்லை’ என்று ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்), (தம் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள் என அறிவித்தார்கள்.

Share this Hadith: