அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2878

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سُفْيَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَبِي أَحْمَدَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ: ‏
‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏
‏وَالْمُزَابَنَةُ ‏ ‏اشْتِرَاءُ الثَّمَرِ فِي رُءُوسِ النَّخْلِ ‏ ‏وَالْمُحَاقَلَةُ ‏ ‏كِرَاءُ ‏ ‏الْأَرْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஸாபனா’வையும் ‘முஹாகலா’வையும் தடை செய்தார்கள். ‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள செங்கனிகளுக்குப் பதிலாக, உலர்ந்த கனிகளை வாங்குவதாகும். ‘முஹாகலா’ என்பது, (முன் நிபந்தனை விதித்து) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)