அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2879

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا لَا نَرَى ‏ ‏بِالْخِبْرِ ‏ ‏بَأْسًا حَتَّى كَانَ عَامُ أَوَّلَ فَزَعَمَ ‏ ‏رَافِعٌ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏فَتَرَكْنَاهُ مِنْ أَجْلِهِ

நாங்கள் (முஆவியா (ரலி) ஆட்சியின்) முதலாண்டுவரை ‘முகாபரா’ முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “நபி (ஸல்) அதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“ … எனவே, நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை விட்டுவிட்டோம்” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் நிறைவாக இடம்பெற்றுள்ளது.

‘முகாரபா‘ பற்றிய கூடுதல் விபரங்கள் ஹதீஸ் எண் 2872இன் அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.