அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2882

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ: ‏
ذَهَبْتُ مَعَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏إِلَى ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏حَتَّى أَتَاهُ ‏ ‏بِالْبَلَاطِ ‏ ‏فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْمَزَارِعِ ‏


و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي خَلَفٍ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ أَتَى ‏ ‏رَافِعًا ‏ ‏فَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகில்) ‘பலாத்து’ எனும் இடத்திலிருந்த ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

அல் ஹகம் (ரஹ்) வழி வரும் ஹதீஸ் “ …“இப்னு உமர் (ரலி) ராஃபிஉ (ரலி) அவர்களிடம் சென்றார்கள்” என ஆரம்பமாகிறது.