அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2951

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏أَنَّ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ ‏ ‏وَهُوَ رَجُلٌ مِنْ ‏ ‏شَنُوءَةَ ‏ ‏مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا ‏ ‏لَا يُغْنِي عَنْهُ ‏ ‏زَرْعًا وَلَا ضَرْعًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ

قَالَ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ ‏ ‏ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏السَّائِبُ بْنُ يَزِيدَ ‏ ‏أَنَّهُ وَفَدَ عَلَيْهِمْ ‏ ‏سُفْيَانُ بْنُ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيُّ ‏ ‏فَقَالَ قَالَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

ஷனூஆ குலத்தைச் சேர்ந்த நபித் தோழர்களில் ஒருவரான ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் தேவையேதுமின்றி நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்’ என்று கூறியதை நான் கேட்டேன்” என்றார்கள்.

நான், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி மீதாணையாக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) வழியாக ஸாயிப் பின் யஸீத் (ரஹ்)


குறிப்பு :

இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பில், {எங்களிடம் ஷனூஆ குலத்தைச் சேர்ந்த ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) ஒரு தூதுக் குழுவினரோடு வந்திருந்தபோது, “ … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்…” என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது}.

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2950

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ سُمَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَزِينٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ اتَّخَذَ كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ وَلَا غَنَمٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ

“வேட்டை நாய், ஆடுகளைக் காவல் காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2949

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ الْمُنْذِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَرْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“விளைநிலங்களையும் கால்நடைகளையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மைகளி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2948

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ


قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏فَذُكِرَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏قَوْلُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏يَرْحَمُ اللَّهُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏كَانَ صَاحِبَ زَرْعٍ

“கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டை நாயையும், விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர பிற நாயை எடுத்து வளர்ப்பவருடைய நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று எடுத்துரைக்கப்பட்டபோது அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவர்கள் விளைநிலங்கள் உடையவராக இருந்தார்கள் (எனவே, அதைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்)” என்றுரைத்தார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2947

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ وَلَا مَاشِيَةٍ وَلَا أَرْضٍ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏كُلَّ يَوْمٍ ‏


وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي الطَّاهِرِ ‏ ‏وَلَا أَرْضٍ

“வேட்டை நாயினாலோ, கால்நடைகளைக் காவல் காக்கும் நாயினாலோ (விளை) நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ அன்றி, பிற நாயினால் அதை வளர்ப்பவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபுத்தாஹிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … (விளை)நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ …” என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2946

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يُحَدِّثُ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ زَرْعٍ أَوْ غَنَمٍ أَوْ صَيْدٍ يَنْقُصُ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ

“விளைநிலங்கள், ஆடுகள் ஆகியவற்றைக் காவல் காக்கும் நாய்களையும் வேட்டை நாய்களையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்“ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2945

‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّمَا أَهْلِ دَارٍ اتَّخَذُوا كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَائِدٍ نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطَانِ

“கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர பிற நாயைத் தமது இல்லத்தில் வளர்ப்பவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2944

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ضَارٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطَانِ ‏


قَالَ ‏ ‏سَالِمٌ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَوْ كَلْبَ حَرْثٍ وَكَانَ صَاحِبَ حَرْثٍ

“வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

விளைநிலங்கள் வைத்திருந்த அபூஹுரைரா (ரலி), “விளைநிலங்களைக் காவல் காக்கும் நாயையும் தவிர” என்று (சேர்த்துக்) கூறுபவர்களாக இருந்தார்கள். என்று இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்தம் மகன் ஸாலிம் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2943

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَوْ كَلْبَ حَرْثٍ

“கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அபூஹுரைரா (ரலி), “விளைநிலங்களைக் காவல் காக்கும் நாயையும் தவிர” என்று கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2942

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ‏ ‏ضَارِيَةٍ ‏ ‏أَوْ مَاشِيَةٍ ‏ ‏نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطَانِ

“வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)