அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2937

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ غَنَمٍ أَوْ مَاشِيَةٍ ‏


فَقِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏إِنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَوْ كَلْبَ زَرْعٍ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏إِنَّ ‏ ‏لِأَبِي هُرَيْرَةَ ‏ ‏زَرْعًا

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), வேட்டை நாயையும் ஆடுகள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர மற்ற நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்” என்றார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “விவசாயப் பண்ணைகளைப் பாதுகாக்கும் நாய்களையும் தவிர என்று அபூஹுரைரா (ரலி) கூறிவருகிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி), “அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பண்ணை நிலம் இருக்கிறது (எனவே, அதைப் பற்றி அவர் கூடுதலாக அறிந்திருப்பார்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)

Share this Hadith: