அத்தியாயம்: 22, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2955

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَبْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏
حَجَمَ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدٌ ‏ ‏لِبَنِي بَيَاضَةَ ‏ ‏فَأَعْطَاهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَجْرَهُ وَكَلَّمَ سَيِّدَهُ فَخَفَّفَ عَنْهُ مِنْ ضَرِيبَتِهِ وَلَوْ كَانَ ‏ ‏سُحْتًا ‏ ‏لَمْ يُعْطِهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘பனூ பயாளா’ குலத்தாரின் அடிமை ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்குக் குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்குரிய ஊதியத்தை நபி (ஸல்) கொடுத்தார்கள். அது (குருதி உறிஞ்சக் கூலி) தடை செய்யப்பட்டதாக இருந்தால், அவருக்கு நபி (ஸல்) (ஊதியம்) கொடுத்திருக்கமாட்டார்கள். அவருடைய உரிமையாளரிடம் பேசி, அவர் செலுத்த வேண்டியிருந்த வரியையும் குறைக்கச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2954

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمَخْزُومِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏احْتَجَمَ ‏ ‏وَأَعْطَى ‏ ‏الْحَجَّامَ ‏ ‏أَجْرَهُ ‏ ‏وَاسْتَعَطَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குருதி உறிஞ்சக் கொடுத்தார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவருடைய ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தமது மூக்கில் (சொட்டு) மருந்து விட்டுக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2953

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ: ‏
دَعَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غُلَامًا ‏ ‏لَنَا ‏ ‏حَجَّامًا ‏ ‏فَحَجَمَهُ ‏ ‏فَأَمَرَ لَهُ ‏ ‏بِصَاعٍ ‏ ‏أَوْ ‏ ‏مُدٍّ ‏ ‏أَوْ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ عَنْ ضَرِيبَتِهِ

நபி (ஸல்) குருதி உறிஞ்சி எடுக்கும் எங்கள் அடிமை (ஊழியர்) ஒருவரை அழைத்து வரச் செய்து, தமக்குக் குருதி உறிஞ்சி எடுக்கச் செய்தார்கள். அவருக்கு ஒரு ‘ஸாஉ’ அல்லது ஒரு ‘முத்’ அல்லது இரண்டு ‘முத்’ (அளவுக்கு உணவுப் பொருட்களை ஊதியமாகக்) கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்; அவர் சம்பந்தமாக (அவருடைய உரிமையாளர்களிடம்) பேசினார்கள். அதையடுத்து அவர் செலுத்த வேண்டியிருந்த வரி குறைக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2952

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ: ‏
سُئِلَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ كَسْبِ ‏ ‏الْحَجَّامِ ‏ ‏فَقَالَ ‏ ‏احْتَجَمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَمَهُ ‏ ‏أَبُو طَيْبَةَ ‏ ‏فَأَمَرَ لَهُ ‏ ‏بِصَاعَيْنِ ‏ ‏مِنْ طَعَامٍ وَكَلَّمَ أَهْلَهُ فَوَضَعُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ وَقَالَ ‏ ‏إِنَّ أَفْضَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ ‏ ‏الْحِجَامَةُ ‏ ‏أَوْ هُوَ مِنْ أَمْثَلِ دَوَائِكُمْ ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ سُئِلَ ‏ ‏أَنَسٌ ‏ ‏عَنْ كَسْبِ الْحَجَّامِ فَذَكَرَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ أَفْضَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ ‏ ‏الْحِجَامَةُ ‏ ‏وَالْقُسْطُ الْبَحْرِيُّ ‏ ‏وَلَا تُعَذِّبُوا صِبْيَانَكُمْ ‏ ‏بِالْغَمْزِ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுப்பவரின் சம்பாத்தியம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறிஞ்சி எடுக்கக் குருதி கொடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அபூதைபா (நாஃபிஉ) என்பவர் குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்கு ஊதியமாக இரண்டு ‘ஸாஉ’ உணவுப் பொருட்கள் கொடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள். மேலும், (அடிமை) அபூதைபாவின் உரிமையாளர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேசியதையடுத்து (அவர் செலுத்த வேண்டிய வரியை) உரிமையாளர்கள் தள்ளுபடி செய்தனர்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அரபுகளே!) நீங்கள் பெறுகின்ற சிகிச்சைகளில் சிறந்தது, குருதி உறிஞ்சி எடுப்பதாகும் (அல்லது) அது உங்களின் சிறந்த சிகிச்சைகளில் உள்ளதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக ஹுமைத் அத்தவீல் (ரஹ்)


குறிப்பு :

மர்வான் அல் ஃபஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அனஸ் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுப்பவரின் சம்பாத்தியம் பற்றிக் கேட்கப்பட்டது …” என்று ஹதீஸ் ஆரம்பமாகி, “… மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நீங்கள் சிகிச்சை பெறுவதிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும் கோஷ்டமும்தான்+. உங்கள் குழந்தைகளை (அவர்களது அடி நாக்கு அழற்சியைப் போக்க, தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள் என்று கூறினார்கள்” என ஹதீஸ் முடிகிறது.

+கோஷ்டம்

கோஷ்டம்கோஷ்டம் என்பது, நட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வசம்பை ஒத்த மூலிகை வேர் / பட்டை.

மருத்துவப் பயன்கள்:

  1. சீன மருத்துவத்தில் கோஷ்டம் என்பது இருமல், இருமலுடன் கூடிய கபம், ஜலதோஷம், ஆர்த்தரைடீஸ், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு மருந்தாகத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது.
  2. கோஷ்ட வேர்கள் ஆஸ்துமா, இருமலுக்கு நல்ல மருந்தாகும்.
  3. விந்துவை வளர்க்கும், வாத கபங்களை தணிக்கும்.
  4. மூன்று தோஷங்களையும் தணிக்கும்.
  5. நஞ்சு, அரிப்பு, இருமல், விக்கல், காய்ச்சல் ஆகியவற்றை போக்கும்.
  6. கோஷ்டத்தின் தூளை நெய், தேன் இவற்றுடன் கலந்து நாள்தோறும் காலையில் உட்கொண்டால், (இன்ஷா அல்லாஹ்) நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.