அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2975

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمِنْهَالِ ‏ ‏قَالَ: ‏
بَاعَ شَرِيكٌ لِي ‏ ‏وَرِقًا ‏ ‏بِنَسِيئَةٍ ‏ ‏إِلَى الْمَوْسِمِ أَوْ إِلَى الْحَجِّ فَجَاءَ إِلَيَّ فَأَخْبَرَنِي فَقُلْتُ هَذَا أَمْرٌ لَا يَصْلُحُ قَالَ قَدْ بِعْتُهُ فِي السُّوقِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ فَأَتَيْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَنَحْنُ نَبِيعُ هَذَا الْبَيْعَ فَقَالَ ‏ ‏مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ بِهِ وَمَا كَانَ ‏ ‏نَسِيئَةً ‏ ‏فَهُوَ رِبًا ‏ ‏وَائْتِ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَإِنَّهُ أَعْظَمُ تِجَارَةً مِنِّي فَأَتَيْتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ ذَلِكَ

என் கூட்டாளி ஒருவர், (தங்கத்திற்கு) வெள்ளியை ஹஜ் பருவம்வரை கடனுக்கு (நாணயமாற்று முறையில்) விற்றார். பின்னர் என்னிடம் வந்து அதைப் பற்றித் தெரிவித்தார். நான், “இது முறையாகாது” என்றேன். அவர், “அவ்வாறாயின் நான் கடைத் தெருவில் அதை விற்றபோது என்னிடம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை” என்று சொன்னார். ஆகவே, நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றி (விளக்கம்) கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) மதீனாவுக்கு (ப் புலம் பெயர்ந்து) வந்தபோது, நாங்கள் இதே வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘உடனுக்குடன் (நாணயமாற்று) செய்துகொண்டால் குற்றமில்லை; (தங்கத்தை வெள்ளிக்கோ, வெள்ளியைத் தங்கத்திற்கோ) கடனாக மாற்றினால்தான் அது வட்டியாகும்’ என்று கூறினார்கள். நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் போ(ய் விசாரி)! ஏனெனில், அவர் என்னைவிட பெரிய வணிகர் ஆவார்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது, பராஉ (ரலி) கூறியதைப் போன்றே அவர்களும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)

Share this Hadith: