அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2976

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا الْمِنْهَالِ ‏ ‏يَقُولُ سَأَلْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏عَنْ الصَّرْفِ ‏ ‏فَقَالَ: ‏
سَلْ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَهُوَ أَعْلَمُ فَسَأَلْتُ ‏ ‏زَيْدًا ‏ ‏فَقَالَ سَلْ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏فَإِنَّهُ أَعْلَمُ ثُمَّ قَالَا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ ‏ ‏الْوَرِقِ ‏ ‏بِالذَّهَبِ دَيْنًا

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேளும். அவர் (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீர் பராஉ (ரலி) அவர்களிடமே கேளும். அவரே (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். பின்னர் இருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)

Share this Hadith: