அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2981

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ ‏ ‏وَعَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏وَغَيْرِهِمَا ‏ ‏أَنَّ ‏ ‏عَامِرَ بْنَ يَحْيَى الْمَعَافِرِيَّ ‏ ‏أَخْبَرَهُمْ عَنْ ‏ ‏حَنَشٍ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏‏
كُنَّا مَعَ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏فِي غَزْوَةٍ ‏ ‏فَطَارَتْ ‏ ‏لِي وَلِأَصْحَابِي قِلَادَةٌ فِيهَا ذَهَبٌ ‏ ‏وَوَرِقٌ ‏ ‏وَجَوْهَرٌ فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهَا فَسَأَلْتُ ‏ ‏فَضَالَةَ بْنَ عُبَيْدٍ ‏ ‏فَقَالَ انْزِعْ ذَهَبَهَا فَاجْعَلْهُ فِي كِفَّةٍ وَاجْعَلْ ذَهَبَكَ فِي كِفَّةٍ ثُمَّ لَا تَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ ‏ ‏فَإِنِّي ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர்ச் செல்வத்தின் பங்காக) தங்க மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, மாணிக்கக் கற்கள் ஆகியன பதித்திருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து, அதைத் தராசின் ஒரு தட்டிலும், உனது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. பிறகு சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக ஹனஷ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

Share this Hadith: