அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2982

‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏بُسْرَ بْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ أَرْسَلَ غُلَامَهُ ‏ ‏بِصَاعِ ‏ ‏قَمْحٍ فَقَالَ بِعْهُ ثُمَّ اشْتَرِ بِهِ شَعِيرًا فَذَهَبَ الْغُلَامُ فَأَخَذَ ‏ ‏صَاعًا ‏ ‏وَزِيَادَةَ بَعْضِ ‏ ‏صَاعٍ ‏ ‏فَلَمَّا جَاءَ ‏ ‏مَعْمَرًا ‏ ‏أَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ لَهُ ‏ ‏مَعْمَرٌ ‏ ‏لِمَ فَعَلْتَ ذَلِكَ انْطَلِقْ فَرُدَّهُ وَلَا تَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ: ‏
فَإِنِّي كُنْتُ‏
‏أَسْمَعُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الطَّعَامُ بِالطَّعَامِ مِثْلًا بِمِثْلٍ قَالَ وَكَانَ طَعَامُنَا يَوْمَئِذٍ الشَّعِيرَ قِيلَ لَهُ فَإِنَّهُ لَيْسَ بِمِثْلِهِ قَالَ إِنِّي أَخَافُ أَنْ ‏ ‏يُضَارِعَ

மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஒரு ‘ஸாஉ’ கோதுமையைத் தம் அடிமையிடம் கொடுத்து, “இதை விற்றுவிட்டு அந்தக் காசைக் கொண்டு பார்லி வாங்கி வா” என்று அனுப்பினார்கள். அந்த அடிமை சென்று, அதைக் கொடுத்து ஒரு ‘ஸாஉ’ பார்லியும் சற்றுக் கூடுதலாகவும் பெற்றுவந்து மஅமர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தார்.

அதற்கு மஅமர் (ரலி), “ஏன் அவ்வாறு செய்தாய்? நீ சென்று (கூடுதலாகப் பெற்ற) அதைத் திருப்பிக் கொடுத்துவிடு. சரிக்குச் சரியாகவே தவிர (உணவுப் பொருளை) வாங்காதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘சரிக்குச் சரியாகவே உணவுப் பொருள், உணவுப் பொருளுக்கு (விற்கப்படும்)’ என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்’ என்றார்கள்.

மேலும் மஅமர் (ரலி), “அன்றைய நாளில் பார்லி எங்கள் உணவாக இருந்தது” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் “இது, அதைப் போன்று (ஒரே இனமாக) இல்லையே?” என்று (சமாதானம்) கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அது ஒன்றுக்கொன்று ஒப்பானதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஅமர் (ரலி) வழியாக புஸ்ரு பின் ஸயீத்  (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸிலும் இதுபோன்ற ஹதீஸ்களிலும் விற்பது’, ‘வாங்குவதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பண்டமாற்று வணிகத்தையே குறிக்கும்.