அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2983

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَأَبَا سَعِيدٍ ‏ ‏حَدَّثَاهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏أَخَا ‏ ‏بَنِي عَدِيٍّ الْأَنْصَارِيَّ ‏ ‏فَاسْتَعْمَلَهُ عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَقَدِمَ بِتَمْرٍ ‏ ‏جَنِيبٍ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكُلُّ تَمْرِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏هَكَذَا قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَشْتَرِي ‏ ‏الصَّاعَ ‏ ‏بِالصَّاعَيْنِ ‏ ‏مِنْ ‏ ‏الْجَمْعِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَفْعَلُوا وَلَكِنْ مِثْلًا بِمِثْلٍ أَوْ بِيعُوا هَذَا وَاشْتَرُوا بِثَمَنِهِ مِنْ هَذَا وَكَذَلِكَ الْمِيزَانُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ அதீ அல்அன்ஸாரீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்து அனுப்பிவைத்தார்கள். அவர் (திரும்பி வரும்போது) தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபரின் பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தரம் குறைந்த பேரீச்சம் பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களைக் கொடுத்துவிட்டு, (தரமான பேரீச்சம் பழத்தில்) ஒரு ‘ஸாஉ’ வாங்குவோம்” என்று சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்கள். (உணவுப் பொருளை) சரிக்குச் சமமாகவே வாங்குங்கள். அல்லது (தரம் குறைந்த உங்கள்) பேரீச்சம் பழத்தை (விலைக்கு) விற்றுவிட்டு, அந்தத் தொகைக்கு அ(ந்தத் தரமான பழத்)தை வாங்குங்கள். இவ்வாறு(முகத்தல் அளவை போலத்)தான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)