அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2984

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَعْمَلَ ‏ ‏رَجُلًا ‏ ‏عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَجَاءَهُ بِتَمْرٍ ‏ ‏جَنِيبٍ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكُلُّ تَمْرِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏هَكَذَا فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ ‏ ‏الصَّاعَ ‏ ‏مِنْ هَذَا ‏ ‏بِالصَّاعَيْنِ ‏ ‏وَالصَّاعَيْنِ ‏ ‏بِالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَا تَفْعَلْ بِعْ ‏ ‏الْجَمْعَ ‏ ‏بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ ‏ ‏جَنِيبًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்(து அனுப்பிவைத்)தார்கள். அவர் (திரும்பி வரும்போது) தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தரம் குறைந்த பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ‘ஸாஉ’ இந்தப் பழம் வாங்குகின்றோம்; அல்லது தரம் குறைந்த பேரீச்சம் பழங்களில் மூன்று ‘ஸாஉ’கள் கொடுத்து, (தரமான பேரீச்சம் பழங்களில்) இரண்டு ‘ஸாஉ’கள் வாங்குகின்றோம்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவ்வாறு செய்யாதீர்! தரம் குறைந்த பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்த வெள்ளிக் காசுகளுக்குத் தரமான பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)