அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2985

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏يَقُولُ: ‏
جَاءَ ‏ ‏بِلَالٌ ‏ ‏بِتَمْرٍ ‏ ‏بَرْنِيٍّ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ أَيْنَ هَذَا فَقَالَ ‏ ‏بِلَالٌ ‏ ‏تَمْرٌ كَانَ عِنْدَنَا رَدِيءٌ فَبِعْتُ مِنْهُ ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ لِمَطْعَمِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ عِنْدَ ذَلِكَ ‏ ‏أَوَّهْ عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ التَّمْرَ فَبِعْهُ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِ بِهِ ‏


لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ سَهْلٍ ‏ ‏فِي حَدِيثِهِ عِنْدَ ذَلِكَ

பிலால் (ரலி) உயர் ரக பர்னீ பேரீச்சம் பழங்களுடன் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி), “என்னிடம் தரம் குறைந்த பேரீச்சம் பழங்கள் இருந்தன; நபி (ஸல்) அவர்களின் உணவுக்காக அதில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து இ(ந்தத் தரமான பேரீச்சம் பழத்)தில் ஒரு ‘ஸாஉ’ வாங்கினேன்” என்றார்.

இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆ! இது யதார்த்தத்தில் வட்டியாகும்! இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இந்த(தரமான)ப் பேரீச்சம் பழத்தை வாங்க விரும்பினால் உங்களிடமுள்ள அ(ந்தத் தரம் குறைந்த பேரீச்சம் பழத்)தைத் தனியாக (விலைக்கு) விற்றுவிட்டு, பிறகு அந்தத் தொகையின் மூலம் (தரமான பேரீச்சம் பழத்தை) வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஸஹ்லு அத்தமீமீ (ரஹ்) வழி அறிவிப்பில் “ இதைக் கேட்டவுடன்…“  எனும் சொல் இடம்பெறவில்லை.

Share this Hadith: