அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2988

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ أَيَدًا بِيَدٍ قُلْتُ نَعَمْ قَالَ فَلَا بَأْسَ بِهِ فَأَخْبَرْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏فَقُلْتُ إِنِّي سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ أَيَدًا بِيَدٍ قُلْتُ نَعَمْ قَالَ فَلَا بَأْسَ بِهِ قَالَ ‏ ‏أَوَ قَالَ ذَلِكَ إِنَّا سَنَكْتُبُ إِلَيْهِ فَلَا ‏ ‏يُفْتِيكُمُوهُ ‏
‏قَالَ فَوَاللَّهِ لَقَدْ جَاءَ بَعْضُ فِتْيَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِتَمْرٍ فَأَنْكَرَهُ فَقَالَ كَأَنَّ هَذَا لَيْسَ مِنْ تَمْرِ أَرْضِنَا قَالَ كَانَ فِي تَمْرِ أَرْضِنَا أَوْ فِي تَمْرِنَا الْعَامَ بَعْضُ الشَّيْءِ فَأَخَذْتُ هَذَا وَزِدْتُ بَعْضَ الزِّيَادَةِ فَقَالَ ‏ ‏أَضْعَفْتَ أَرْبَيْتَ لَا تَقْرَبَنَّ هَذَا إِذَا ‏ ‏رَابَكَ ‏ ‏مِنْ تَمْرِكَ شَيْءٌ فَبِعْهُ ثُمَّ اشْتَرِ الَّذِي تُرِيدُ مِنْ التَّمْرِ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் பற்றி வினவினேன். அப்போது அவர்கள் “உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “அவ்வாறாயின் குற்றமில்லை” என்றார்கள்.

பிறகு அபூஸயீத் (ரலி) அவர்களிடம் நான் இதைத் தெரிவித்தேன். “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ‘அவ்வாறாயின் குற்றமில்லை’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றேன். அபூஸயீத் (ரலி), “அவ்வாறா சொன்னார்கள்? நாம் அவருக்குக் கடிதம் எழுதுகிறோம். இனி அவ்வாறு உங்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டார்” என்று கூறிவிட்டு,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியர்களில் ஒருவர், ஒரு வகைப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அந்தப் பழங்களை அந்நியமாகக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இது நமது மண்ணில் விளையும் பேரீச்சம் பழங்கள் இல்லை போலிருக்கிறதே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இந்த ஆண்டு நமது மண்ணில் – நமது பேரீச்சம் பழங்களில் – சில (தரம் குறைந்தவை) இருந்தன. எனவே, அவற்றையும் அவற்றுடன் இன்னும் சிறிதளவு கூடுதல் பழத்தையும் கொடுத்து, (தரமான) இந்தப் பழத்தைப் பெற்றேன்’ என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘கூடுதலாகக் கொடுத்துவிட்டாய்; வட்டியாக்கிவிட்டாய். இதை நமக்கு அருகில் கொண்டுவர வேண்டாம். உன்னுடைய பேரீச்சம் பழங்கள் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதை (விலைக்கு) விற்றுவிட்டு, பின்னர் (அந்தத் தொகையை வைத்து) நீ விரும்புகின்ற(பேரீச்சம் பழ இனத்)தை வாங்கிக்கொள்’ என்று கூறினார்கள்” என்று அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)