அத்தியாயம்: 22, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2998

‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُثْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ:
‏غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَلَاحَقَ بِي وَتَحْتِي ‏ ‏نَاضِحٌ ‏ ‏لِي قَدْ ‏ ‏أَعْيَا ‏ ‏وَلَا يَكَادُ يَسِيرُ قَالَ فَقَالَ لِي مَا لِبَعِيرِكَ قَالَ قُلْتُ عَلِيلٌ قَالَ فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَزَجَرَهُ وَدَعَا لَهُ فَمَا زَالَ بَيْنَ يَدَيْ الْإِبِلِ قُدَّامَهَا يَسِيرُ قَالَ فَقَالَ لِي كَيْفَ ‏ ‏تَرَى بَعِيرَكَ قَالَ قُلْتُ بِخَيْرٍ قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ قَالَ أَفَتَبِيعُنِيهِ فَاسْتَحْيَيْتُ وَلَمْ يَكُنْ لَنَا ‏ ‏نَاضِحٌ ‏ ‏غَيْرُهُ قَالَ فَقُلْتُ نَعَمْ فَبِعْتُهُ إِيَّاهُ عَلَى أَنَّ لِي ‏ ‏فَقَارَ ظَهْرِهِ ‏ ‏حَتَّى أَبْلُغَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏قَالَ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي عَرُوسٌ فَاسْتَأْذَنْتُهُ فَأَذِنَ لِي فَتَقَدَّمْتُ النَّاسَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏حَتَّى انْتَهَيْتُ فَلَقِيَنِي خَالِي فَسَأَلَنِي عَنْ الْبَعِيرِ فَأَخْبَرْتُهُ بِمَا صَنَعْتُ فِيهِ فَلَامَنِي فِيهِ قَالَ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ مَا تَزَوَّجْتَ أَبِكْرًا أَمْ ‏ ‏ثَيِّبًا ‏ ‏فَقُلْتُ لَهُ تَزَوَّجْتُ ‏ ‏ثَيِّبًا ‏ ‏قَالَ ‏ ‏أَفَلَا تَزَوَّجْتَ بِكْرًا تُلَاعِبُكَ وَتُلَاعِبُهَا فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ تُوُفِّيَ وَالِدِي أَوْ اسْتُشْهِدَ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ إِلَيْهِنَّ مِثْلَهُنَّ فَلَا تُؤَدِّبُهُنَّ وَلَا تَقُومُ عَلَيْهِنَّ فَتَزَوَّجْتُ ‏ ‏ثَيِّبًا ‏ ‏لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ قَالَ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏غَدَوْتُ إِلَيْهِ بِالْبَعِيرِ فَأَعْطَانِي ثَمَنَهُ وَرَدَّهُ عَلَيَّ


حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَقْبَلْنَا مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاعْتَلَّ ‏ ‏جَمَلِي وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَفِيهِ ثُمَّ قَالَ لِي بِعْنِي جَمَلَكَ هَذَا قَالَ قُلْتُ لَا بَلْ هُوَ لَكَ قَالَ لَا بَلْ بِعْنِيهِ قَالَ قُلْتُ لَا بَلْ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا بَلْ بِعْنِيهِ قَالَ قُلْتُ فَإِنَّ لِرَجُلٍ عَلَيَّ ‏ ‏أُوقِيَّةَ ‏ ‏ذَهَبٍ فَهُوَ لَكَ بِهَا قَالَ قَدْ أَخَذْتُهُ فَتَبَلَّغْ عَلَيْهِ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَالَ فَلَمَّا قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِبِلَالٍ ‏ ‏أَعْطِهِ ‏ ‏أُوقِيَّةً ‏ ‏مِنْ ذَهَبٍ وَزِدْهُ قَالَ فَأَعْطَانِي ‏ ‏أُوقِيَّةً ‏ ‏مِنْ ذَهَبٍ وَزَادَنِي ‏ ‏قِيرَاطًا ‏ ‏قَالَ فَقُلْتُ لَا تُفَارِقُنِي زِيَادَةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَانَ فِي كِيسٍ لِي فَأَخَذَهُ أَهْلُ ‏ ‏الشَّامِ ‏ ‏يَوْمَ ‏ ‏الْحَرَّةِ

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَتَخَلَّفَ ‏ ‏نَاضِحِي ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ ‏ ‏فَنَخَسَهُ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ لِي ارْكَبْ بِاسْمِ اللَّهِ وَزَادَ أَيْضًا قَالَ فَمَا زَالَ يَزِيدُنِي وَيَقُولُ وَاللَّهُ يَغْفِرُ لَكَ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். சோர்ந்துபோய், நடக்க முடியாமல் நடந்துகொண்டிருந்த, தண்ணீர் சுமக்கும் எனது ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து நான் சென்றுகொண்டிருந்தபோது (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை வந்தடைந்தார்கள். என்னிடம், “உனது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான் “நோய் கண்டுள்ளது” என்றேன்.

அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சற்றுப் பின்வாங்கி அதை அதட்டினார்கள்; அதற்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள். உடனே அது (வேகமாக ஓடி) எல்லா ஒட்டகங்களுக்கும் முன்னே சென்றுகொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “உனது ஒட்டகத்தை (இப்போது) எப்படிக் காண்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் “நல்ல நிலையில் காண்கிறேன். உங்களது (பிரார்த்தனையின்) வளம் அதற்குக் கிடைத்து விட்டது” என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அதை எனக்கு விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் (நபியவர்களுக்கு விலைக்கு விற்க) வெட்கப்பட்டேன். (அத்துடன்) எங்களிடம் அதைத் தவிர தண்ணீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. என்றாலும், “சரி (விற்றுவிடுகிறேன்)” என்றேன். ஆயினும், மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின்பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றேன்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி) மதீனாவுக்கு விரைவாகச் செல்வதற்கு அனுமதி கேட்டேன். அவர்கள் என்னிடம், “நீ யாரை மணந்து கொண்டாய்? கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “கன்னி கழிந்த பெண்ணைத்தான் மணந்துகொண்டேன்” என்றேன். “கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டார்.  ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ முன்வராத, அவர்களைப் போன்றே (அனுபவமற்ற இளவயதுப் பெண்) ஒருத்தியை மணந்து, அவர்களிடம் அழைத்துச் செல்ல நான் விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் (வாழ்ந்து பக்குவப்பட்ட) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே நான் மணந்துகொண்டேன்” என்று விடையளித்தேன்.

பின்னர், (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் எல்லரையும்விட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என் தாய் மாமன் (ஜத்து பின் கைஸ் என்னைச்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை என்ன செய்தேன் என்பதை அவரிடம் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் கடிந்துகொண்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலையில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் (அன்பளிப்பாக) என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

ஸாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வந்துகொண்டிருந்தோம். அப்போது எனது ஒட்டகத்திற்கு நோய் ஏற்பட்டுவிட்டது…” என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது இந்த ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடு” என்று கேட்டார்கள். நான், “இல்லை; அது உங்களுக்கே உரியது (விலை வேண்டாம்)” என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை; அதை எனக்கு விலைக்கு விற்றுவிடு” என்றார்கள். நான், “இல்லை (விலை வேண்டாம்) இது உங்களுக்கு உரியது, அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அவர்கள், “இல்லை, அதை நீ எனக்கு விற்றுவிடு” என்றார்கள். “அவ்வாறாயின் நான் ஒருவருக்கு ஓர் ஊக்கியா தங்கம் கடன் பட்டிருக்கின்றேன். அந்தக் கடனுக்குப் பகரமாக இதை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் இதை வாங்கிக்கொண்டேன். (உன் கோரிக்கைப்படி) மதீனா வரை இதன் மீது அமர்ந்துகொண்டு வந்துசேர்” என்றார்கள்.

நான் மதீனாவுக்கு வந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருக்கு ஓர் ஊக்கியா தங்கத்தையும் கூடுதலாக(எது)வும் கொடுங்கள்” என்றார்கள். பிலால் (ரலி) என்னிடம் ஓர் ஊக்கியா தங்கமும் கூடுதலாக ஒரு கீராத்தும் கொடுத்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூடுதலாகத் வழங்கிய(கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியக்கூடாது” என்று நான் எண்ணிக்கொண்டேன். அந்த ஒரு கீராத் எனது பணப் பையிலேயே இருந்துவந்தது. பின்னர் ‘ஹர்ரா’ப் போர் நாளில் சிரியாவாசிகள் அதை எடுத்துக்கொண்டு விட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

அபூநள்ரா (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எனது ஒட்டகம் பின்தங்கிவிட்டது…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், “பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ(ந்த ஒட்டகத்)தைக் (குச்சியால்) குத்தினார்கள். பிறகு என்னிடம், ‘அல்லாஹ்வின் பெயரால் இதில் ஏறிச் செல்’ என்றார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், “எனக்கு அதிகமாகக் கொடுத்துக்கொண்டே ‘அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக!’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: