அத்தியாயம்: 22, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2999

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
لَمَّا أَتَى عَلَيَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدْ أَعْيَا بَعِيرِي قَالَ ‏ ‏فَنَخَسَهُ ‏ ‏فَوَثَبَ فَكُنْتُ بَعْدَ ذَلِكَ أَحْبِسُ ‏ ‏خِطَامَهُ ‏ ‏لِأَسْمَعَ حَدِيثَهُ فَمَا أَقْدِرُ عَلَيْهِ فَلَحِقَنِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏بِعْنِيهِ فَبِعْتُهُ مِنْهُ بِخَمْسِ ‏ ‏أَوَاقٍ ‏ ‏قَالَ قُلْتُ عَلَى أَنَّ لِي ‏ ‏ظَهْرَهُ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَالَ وَلَكَ ‏ ‏ظَهْرُهُ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَالَ فَلَمَّا قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏أَتَيْتُهُ بِهِ فَزَادَنِي ‏ ‏وُقِيَّةً ‏ ‏ثُمَّ وَهَبَهُ لِي


حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَشِيرُ بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏سَافَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَعْضِ أَسْفَارِهِ أَظُنُّهُ قَالَ غَازِيًا ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ وَزَادَ فِيهِ قَالَ يَا ‏ ‏جَابِرُ ‏ ‏أَتَوَفَّيْتَ ‏ ‏الثَّمَنَ قُلْتُ نَعَمْ قَالَ لَكَ الثَّمَنُ وَلَكَ الْجَمَلُ لَكَ الثَّمَنُ وَلَكَ الْجَمَلُ

எனது ஒட்டகம் (பயணத்தில்) சோர்ந்துபோன நிலையில் நபி (ஸல்) என்னிடம் வந்தார்கள். பிறகு எனது ஒட்டகத்தைக் (குச்சியால்) குத்தினார்கள். அது குதித்தோடலாயிற்று. பின்னர் நபி (ஸல்) சொல்வதைக் கேட்பதற்காக அதன் கடிவாளத்தைப் பிடித்து அதன் வேகத்தை மட்டுப்படுத்த முயன்றேன். ஆனால், என்னால் முடியவில்லை. பிறகு நபி (ஸல்) என்னை வந்தடைந்த போது, “அதை எனக்கு விற்றுவிடு” என்றார்கள். நான் அதை ஐந்து ஊக்கியாக்களுக்கு அவர்களுக்கு விற்றேன்.

அப்போது “மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின்பேரில்” என்று சொன்னேன். நபி (ஸல்) “மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணம் செய்துகொள்ளலாம்” என்றார்கள். நான் மதீனா வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். (அதன் விலையையும்) கூடுதலாக ஓர் ஊக்கியாவும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பின்னர் அந்த ஒட்டகத்தையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அபுல் முதவக்கில் அந்நாஜி (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் -(அறப்போர் வீரனாகக்)- கலந்துகொண்டேன் …” என்று தொடங்கி, “ஜாபிர்! (ஒட்டகத்தின்) தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தொகையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது. தொகையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: