22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம்

باب جَوَازِ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ مِنْ جِنْسِهِ مُتَفَاضِلاً
ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம்

அத்தியாயம்: 22, பாடம்: 23, ஹதீஸ் எண்: 3006

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَابْنُ، رُمْحٍ قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنِيهِ قُتَيْبَةُ، بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:‏
جَاءَ عَبْدٌ فَبَايَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْهِجْرَةِ وَلَمْ يَشْعُرْ أَنَّهُ عَبْدٌ فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ بِعْنِيهِ ‏”‏ ‏.‏ فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ ثُمَّ لَمْ يُبَايِعْ أَحَدًا بَعْدُ حَتَّى يَسْأَلَهُ ‏”‏ أَعَبْدٌ هُوَ ‏”‏

ஓர் அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்ல உறுதி மொழி அளித்தார். அவர் ஓர் அடிமை என்பது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவருடைய உரிமையாளர் நபி (ஸல்) அவர்களைத் தேடிவந்(து, அடிமைப் பற்றி முறையீடு செய்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “அவரை எனக்கு விற்றுவிடு” என்று கூறிவிட்டு, இரு கறுப்பு அடிமைகளைக் கொடுத்து அவரை வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் பின்னர், (தம்மிடம் உறுதிமொழி அளிக்க வருபவர்) அடிமையா? என்று கேட்காத வரை எவரிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிமொழி பெறவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)