அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3022

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ:‏ ‏

أَنَّ أَرْوَى بِنْتَ أُوَيْسٍ، ادَّعَتْ عَلَى سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخَذَ شَيْئًا مِنْ أَرْضِهَا فَخَاصَمَتْهُ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ ‏.‏ فَقَالَ سَعِيدٌ أَنَا كُنْتُ آخُذُ مِنْ أَرْضِهَا شَيْئًا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ ‏”‏ ‏‏ فَقَالَ لَهُ مَرْوَانُ لاَ أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا ‏.‏ فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا ‏.‏ قَالَ فَمَا مَاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا ثُمَّ بَيْنَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَمَاتَتْ

‘எனது நிலத்தில் ஒரு பகுதியை ஸயீத் பின் ஸைத் (ரலி) ஆக்கிரமித்துக் கொண்டார்’ என அர்வா பின்தி உவைஸ் என்பவள் குற்றம் சாட்டி, (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் ஸயீதுக்கு எதிராக வழக்குத் தொடுத்தாள். (விசாரணையின்போது) ஸயீத் பின் ஸைத் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?” என்று கேட்டார்கள்.

அதற்கு மர்வான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற(ஹதீஸான)து யாது?” என்று கேட்டார்கள். அதற்கு ஸயீத் (ரலி), “ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தவரது கழுத்தில், ஏழு பூமிகள் மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள் அதற்கு மர்வான், “இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்” என்றார்கள்.

அப்போது ஸயீத் பின் ஸைத் (ரலி), ”இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் இவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த(ப் பகுதி) நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு (கிணற்றுக்) குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

Share this Hadith: