அத்தியாயம்: 22, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2912

‏حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏أَبِيهِ:
‏أَنَّهُ تَقَاضَى ‏ ‏ابْنَ أَبِي حَدْرَدٍ ‏ ‏دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى كَشَفَ ‏ ‏سِجْفَ ‏ ‏حُجْرَتِهِ وَنَادَى ‏ ‏كَعْبَ بْنَ مَالِكٍ ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏كَعْبُ ‏ ‏فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ فَأَشَارَ إِلَيْهِ بِيَدِهِ أَنْ ‏ ‏ضَعْ ‏ ‏الشَّطْرَ ‏ ‏مِنْ دَيْنِكَ قَالَ ‏ ‏كَعْبٌ ‏ ‏قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُمْ فَاقْضِهِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّ ‏ ‏كَعْبَ بْنَ مَالِكٍ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّهُ تَقَاضَى دَيْنًا لَهُ عَلَى ‏ ‏ابْنِ أَبِي حَدْرَدٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَى ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ كَانَ لَهُ مَالٌ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الْأَسْلَمِيِّ ‏ ‏فَلَقِيَهُ فَلَزِمَهُ فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فَمَرَّ بِهِمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏كَعْبُ ‏ ‏فَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ النِّصْفَ فَأَخَذَ نِصْفًا مِمَّا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) தர வேண்டியிருந்த ஒரு கடனை திருப்பிச் செலுத்தும்படி (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் கேட்டேன். அப்போது (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. எங்கள் குரலைத் தமது வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டுவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கள் இருவரையும் நோக்கி வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி என்னை “கஅபே”! என்று அழைத்தார்கள்.

நான், “இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை நோக்கி, “பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு” என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்களைப் பார்த்து) “எழுவீராக! அவரது (மீதி) கடனை அடைப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் வஹ்பு (ரஹ்) வழி அறிவிப்பு, “எனக்கு இப்னு அபீஹத்ரத் (ரலி) தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்” என்று கஅப் (ரலி) கூறியதாக ஆரம்பமாகிறது.

அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி) எனக்குப் பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரைச் சந்தித்து அவரை (நகரவிடாமல்) பிடித்துக் கொண்டேன். எங்கள் குரல்கள் உயரும் அளவிற்கு நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் “கஅபே!” என்று என்னை அழைத்து, பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு என்பதைப் போன்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். “ஆகவே, அவர் தர வேண்டியிருந்த கடனில் பாதியை மட்டும் பெற்றுக்கொண்டு, மீதிப் பாதியை (தள்ளுபடி செய்து)விட்டேன்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: