அத்தியாயம்: 22, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2933

‏حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏عَنْ ثَمَنِ الْكَلْبِ ‏ ‏وَالسِّنَّوْرِ ‏ ‏قَالَ ‏ ‏زَجَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2932

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ قَارِظٍ ‏ ‏عَنْ ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ: ‏
عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ ‏ ‏وَمَهْرُ الْبَغِيِّ ‏ ‏خَبِيثٌ وَكَسْبُ ‏ ‏الْحَجَّامِ ‏ ‏خَبِيثٌ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“நாய் விற்ற காசு அசுத்தமானதாகும்; விபசாரியின் வருமானம் அசுத்தமானதாகும்; குருதி உறிஞ்சி எடுப்பவரின் சம்பாத்தியம் அசுத்தமானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2931

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يُوسُفَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏شَرُّ الْكَسْبِ ‏ ‏مَهْرُ الْبَغِيِّ ‏ ‏وَثَمَنُ الْكَلْبِ وَكَسْبُ ‏ ‏الْحَجَّامِ

“சம்பாத்தியங்களிலேயே மோசமானவை, விபசாரியின் வருமானம், நாய் விற்ற காசு, குருதி உறிஞ்சி எடுக்கும் மருத்துவர் பெறும் கூலி ஆகியவையே ஆகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2930

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ ‏ ‏وَمَهْرِ الْبَغِيِّ ‏ ‏وَحُلْوَانِ الْكَاهِنِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏مِنْ رِوَايَةِ ‏ ‏ابْنِ رُمْحٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا مَسْعُودٍ

நாய் விற்ற காசு, விபச்சாரியின் வருமானம், சோதிடரின் தட்சணை ஆகியவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி)