அத்தியாயம்: 23, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3039

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ أَبِي السَّفَرِ عَنِ الْبَرَاءِ قَالَ:‏ ‏

آخِرُ آيَةٍ أُنْزِلَتْ يَسْتَفْتُونَكَ

இறுதியாக (நபி (ஸல்) அவர்களுக்கு) அருளப்பெற்ற இறைவசனம், “(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 23, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3038

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عِيسَى، – وَهُوَ ابْنُ يُونُسَ – حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ:‏ ‏

أَنَّ آخِرَ سُورَةٍ أُنْزِلَتْ تَامَّةً سُورَةُ التَّوْبَةِ وَأَنَّ آخِرَ آيَةٍ أُنْزِلَتْ آيَةُ الْكَلاَلَةِ ‏


حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ آدَمَ – حَدَّثَنَا عَمَّارٌ، – وَهُوَ ابْنُ رُزَيْقٍ – عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ آخِرُ سُورَةٍ أُنْزِلَتْ كَامِلَةً

முழுமையாக (நபி (ஸல்) அவர்களுக்கு) அருளப்பெற்ற அத்தியாயங்களில் இறுதியானது ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயமாகும். இறுதியாக அருளப்பெற்ற வசனம் ‘கலாலா’ பற்றிய (4:176ஆவது) வசனமாகும்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

அம்மார் பின் ருஸைக் (ரஹ்) வழி அறிவிப்பில், “முழுமையாக” என்பதைக் குறிக்க“காமிலத்தன்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 23, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3037

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ يَقُولُ:‏ ‏

آخِرُ آيَةٍ أُنْزِلَتْ آيَةُ الْكَلاَلَةِ وَآخِرُ سُورَةٍ أُنْزِلَتْ بَرَاءَةُ

இறுதியாக அருளப்பெற்ற  (குர்ஆன்) வசனம், கலாலா பற்றிய (4:176ஆவது) இறை வசனமாகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ‘பராஅத்’ (‘அத்தவ்பா’) எனும் (9ஆவது) அத்தியாயமாகும்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 23, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3036

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ:‏ ‏

آخِرُ آيَةٍ أُنْزِلَتْ مِنَ الْقُرْآنِ {‏ يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ‏}

“(நபியே!) உம்மிடம் (கலாலா குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176) வசனம்தான் குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)