அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3072

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ:‏ ‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْعُمْرَى جَائِزَةٌ ‏”‏


وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ مِيرَاثٌ لأَهْلِهَا ‏”‏ أَوْ قَالَ ‏”‏ جَائِزَةٌ ‏”‏ ‏.‏

“ஆயுட்கால அன்பளிப்பு செல்லும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசுரிமையாகும்  என்றோ, அது செல்லும் என்றோ கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3071

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ:‏ ‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ الْعُمْرَى مِيرَاثٌ لأَهْلِهَا ‏”‏ ‏

“ஆயுட்கால அன்பளிப்பு என்பது, அன்பளிப்பு பெற்றவரின் வாரிசுரிமையாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3070

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، :‏ ‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْعُمْرَى جَائِزَةٌ ‏”‏ ‏

“ஆயுட்கால அன்பளிப்பு செல்லும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3069

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ- وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ – قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

أَعْمَرَتِ امْرَأَةٌ بِالْمَدِينَةِ حَائِطًا لَهَا ابْنًا لَهَا ثُمَّ تُوُفِّيَ وَتُوُفِّيَتْ بَعْدَهُ وَتَرَكَتْ وَلَدًا وَلَهُ إِخْوَةٌ بَنُونَ لِلْمُعْمِرَةِ فَقَالَ وَلَدُ الْمُعْمِرَةِ رَجَعَ الْحَائِطُ إِلَيْنَا وَقَالَ بَنُو الْمُعْمَرِ بَلْ كَانَ لأَبِينَا حَيَاتَهُ وَمَوْتَهُ ‏.‏ فَاخْتَصَمُوا إِلَى طَارِقٍ مَوْلَى عُثْمَانَ فَدَعَا جَابِرًا فَشَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعُمْرَى لِصَاحِبِهَا فَقَضَى بِذَلِكَ طَارِقٌ ثُمَّ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ فَأَخْبَرَهُ ذَلِكَ وَأَخْبَرَهُ بِشَهَادَةِ جَابِرٍ فَقَالَ عَبْدُ الْمَلِكِ صَدَقَ جَابِرٌ ‏ فَأَمْضَى ذَلِكَ طَارِقٌ ‏.‏ فَإِنَّ ذَلِكَ الْحَائِطَ لِبَنِي الْمُعْمَرِ حَتَّى الْيَوْمِ ‏.‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ طَارِقًا، قَضَى بِالْعُمْرَى لِلْوَارِثِ لِقَوْلِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் மகன்களுள் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த மகன் இறந்துவிட்டார். மகனுக்குப் பின் அவரின் தாயும் இறந்துவிட்டார். அந்த மகன்காரர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்த மகன்காரருக்குத் தாய் வயிற்றில் பிறந்த அவரின் சகோதரர்களும் இருந்தனர். (அவரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள், “தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்” என்று கூறினர். அன்பளிப்புப் பெற்றவரின் மகன்கள், “இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது” என்று கூறினர்.

பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ரு (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றனர். தாரிக் பின் அம்ரு, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி(வழக்கை எடுத்துக் கூறி)னார். அப்போது ஜாபிர் (ரலி), “ஆயுட்கால அன்பளிப்பு, அதைப் பெற்றவருக்கே உரியதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று சாட்சியமளித்தார்கள்.

அதன்படியே தாரிக் பின் அம்ருவும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தையும் ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், “ஜாபிர் சொன்னது உண்மையே” என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். அந்தத் தோட்டம் ஆயுட்கால அன்பளிப்புப் பெற்ற(பின் இறந்த)வரின் மகன்களிடமே இன்றுவரை இருந்துவருகிறது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவித்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டே, “ஆயுட்கால அன்பளிப்பு, (அன்பளிப்புப் பெற்றவரின் ஆயுளுக்குப் பிறகு அவருடைய) வாரிசுகளுக்கே உரியதாகும்” என்று தாரிக் பின் அம்ரு (ரஹ்) தீர்ப்பளித்தார்கள் என்று ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அறிவித்தார்.

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3068

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ وَلاَ تُفْسِدُوهَا فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أُعْمِرَهَا حَيًّا وَمَيِّتًا وَلِعَقِبِهِ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ أَيُّوبَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ أَبِي خَيْثَمَةَ وَفِي حَدِيثِ أَيُّوبَ مِنَ الزِّيَادَةِ قَالَ جَعَلَ الأَنْصَارُ يُعْمِرُونَ الْمُهَاجِرِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ ‏”‏ ‏

“உங்கள் செல்வங்களை வீணாக்கிவிடாமல் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பு என்று வழங்கிவிட்டால் அது அன்பளிப்பாக வழங்கப்பட்டவர் இருந்தாலும் இறந்தாலும் அவருக்கே உரியதாகும். அவர் இறந்துவிட்டால் அவருடைய சந்ததிகளுக்கு உரியதாகிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) வழி அறிவிப்பில்,“அன்ஸாரிகள் முஹாஜிர்களுக்கு ஆயுட்கால அன்பளிப்புகளை (அதிகமாக) வழங்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் செல்வங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். (அவசரப்பட்டு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கி விடாதீர்கள்)” என்று கூறினார்கள் எனும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3067

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ ‏”‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بِمِثْلِهِ ‏.‏
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏

“ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு பொருள், அன்பளிப்பாக வழங்கப்பட்டவருக்கே உரியதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3066

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ – وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَهِيَ لَهُ بَتْلَةً لاَ يَجُوزُ لِلْمُعْطِي فِيهَا شَرْطٌ وَلاَ ثُنْيَا ‏.‏


قَالَ أَبُو سَلَمَةَ لأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ فَقَطَعَتِ الْمَوَارِيثُ شَرْطَهُ

“இது உனக்கும் உன் சந்ததிக்கும் ஆயுட் கால அன்பளிப்பாகும்” என்று கூறி அன்பளிப்பு வழங்கப்பட்ட ஒரு செல்வத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கு (முற்றாக) உரியதாகிவிடும். அதில் நிபந்தனை விதிப்பதற்கோ விதிவிலக்குப் பெறுவதற்கோ அன்பளிப்பு வழங்கியவருக்கு அனுமதி கிடையாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“ஏனெனில், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின் இறப்புக்குப் பின்) அவருடைய வாரிசுகளுக்குப் போய்ச்சேரும் வகையிலேயே அன்பளிப்பு வழங்கியுள்ளார். அந்த வாரிசுரிமை அவரது (திரும்பப் பெறும்) நிபந்தனையைத் துண்டித்துவிட்டது” என்று அபூஸலமா (ரஹ்) கூறினார்கள்.

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3065

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – وَاللَّفْظُ لِعَبْدٍ – قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقُولَ هِيَ لَكَ وَلِعَقِبِكَ ‏.‏ فَأَمَّا إِذَا قَالَ هِيَ لَكَ مَا عِشْتَ‏ فَإِنَّهَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا ‏.‏


قَالَ مَعْمَرٌ وَكَانَ الزُّهْرِيُّ يُفْتِي بِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்” என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். “உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்”  என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் இறப்பிற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்குத் திரும்பிவிடும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மஅமர் (ரஹ்), “இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) இவ்வாறே தீர்ப்பளித்துவந்தார்கள்” என்று கூறினார்.

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3064

حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْعُمْرَى، وَسُنَّتِهَا، عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَالَ قَدْ أَعْطَيْتُكَهَا وَعَقِبَكَ مَا بَقِيَ مِنْكُمْ أَحَدٌ ‏.‏ فَإِنَّهَا لِمَنْ أُعْطِيَهَا وَإِنَّهَا لاَ تَرْجِعُ إِلَى صَاحِبِهَا مِنْ أَجْلِ أَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ ‏”‏

“ஒருவர் மற்றொருவருக்கு ஆயுட் கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும், உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன் என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கே உரியதாகும். அது வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (வழங்கப்பட்டவரின் இறப்பிற்குப் பின் இறந்தவருடைய) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் அன்பளிப்பு வழங்கியுள்ளார்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3063

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ:‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ مَنْ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَدْ قَطَعَ قَوْلُهُ حَقَّهُ فِيهَا وَهِيَ لِمَنْ أُعْمِرَ وَلِعَقِبِهِ”‏ ‏


غَيْرَ أَنَّ يَحْيَى قَالَ فِي أَوَّلِ حَدِيثِهِ ‏”‏ أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عُمْرَى فَهِيَ لَهُ وَلِعَقِبِهِ ‏”‏ ‏

“ஒருவரிடம், ‘இது உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது’ என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால், அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையைத் துண்டித்துவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்கும் உரியதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரு பொருள் ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டால், அது அந்த மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.