அத்தியாயம்: 26, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3101

وَحَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ – يَعْنِي ابْنَ فَضَالَةَ – حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ   :‏

نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ حَافِيَةً فَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَفْتَيْتُهُ فَقَالَ ‏ “‏ لِتَمْشِ وَلْتَرْكَبْ ‏”‏ ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ نَذَرَتْ أُخْتِي ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ مُفَضَّلٍ وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ حَافِيَةً ‏.‏ وَزَادَ وَكَانَ أَبُو الْخَيْرِ لاَ يُفَارِقُ عُقْبَةَ ‏.‏ وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ أَبِي خَلَفٍ، قَالاَ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ بِهَذَا الإِسْنَادِ  مِثْلَ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ ‏.‏

என் சகோதரி காலணி அணியாமல் இறையில்லம் கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டார். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னைப் பணித்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு, வாகனத்தில் ஏறிச் செல்லட்டும்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


குறிப்பு :

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “காலணி அணியாமல்” எனும் குறிப்பு இல்லை. (உக்பா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும்) அபுல்கைர் (ரஹ்), உக்பா (ரலி) அவர்களைவிட்டுப் பிரியாதவராக இருந்தார்” எனும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 26, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3100

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ عَمْرٍو – وَهُوَ ابْنُ أَبِي عَمْرٍو – عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ  :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَدْرَكَ شَيْخًا يَمْشِي بَيْنَ ابْنَيْهِ يَتَوَكَّأُ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ مَا شَأْنُ هَذَا ‏”‏ ‏.‏ قَالَ ابْنَاهُ يَا رَسُولَ اللَّهِ كَانَ عَلَيْهِ نَذْرٌ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَنْ نَذْرِكَ ‏”‏


وَاللَّفْظُ لِقُتَيْبَةَ وَابْنِ حُجْرٍ ‏‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ – يَعْنِي الدَّرَاوَرْدِيَّ – عَنْ عَمْرِو، بْنِ أَبِي عَمْرٍو بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

ஒரு முதியவர் தம் இரு மகன்களுக்கிடையே சாய்ந்தபடி நடந்துவருவதைக் கண்ட நபி (ஸல்), “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மகன்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் (கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக) நேர்ச்சை செய்துள்ளார்” என்று கூறினர். நபி (ஸல்), “பெரியவரே, வாகனத்தில் ஏறிச் செல்வீராக! உம்முடைய நேர்ச்சையோ நடைப்பயணமோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 26, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3099

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، ح. وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَىَ شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ فَقَالَ ‏”‏ مَا بَالُ هَذَا ‏”‏ ‏.‏ قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ ‏.‏ قَالَ ‏”‏ إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ ‏”‏ ‏.‏ وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ ‏

ஒரு முதியவர் தம் இரு மகன்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்), “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்குத் தேவை இல்லாதது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் (ரலி)