அத்தியாயம்: 27, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3145

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ :‏ 

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “نِعِمَّا لِلْمَمْلُوكِ أَنْ يُتَوَفَّى يُحْسِنُ عِبَادَةَ اللَّهِ وَصَحَابَةَ سَيِّدِهِ نِعِمَّا لَهُ‏”‏

“இறைவழிபாட்டிலும் தம் உரிமையாளரின் உறவிலும் செம்மையாகச் செயல்பட்ட நிலையில் மரணிப்பதே ஓர் அடிமைக்கு நன்று; மிகவும் நன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 27, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3144

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ 

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “إِذَا أَدَّى الْعَبْدُ حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ كَانَ لَهُ أَجْرَانِ”‏ ‏ قَالَ فَحَدَّثْتُهَا كَعْبًا فَقَالَ كَعْبٌ لَيْسَ عَلَيْهِ حِسَابٌ وَلاَ عَلَى مُؤْمِنٍ مُزْهِدٍ


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஓர் அடிமை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் நிறைவேற்றினால், அவருக்கு இரு நன்மைகள் உண்டு” என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

நான் இந்த ஹதீஸை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது கஅப் (ரலி), “அவருக்கும் வசதியற்ற இறைநம்பிக்கையாளருக்கும் (மறுமை நாளில்) விசாரணை ஏதுமில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்)

அத்தியாயம்: 27, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3143

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ أَبُو هُرَيْرَةَ :‏ 

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لِلْعَبْدِ الْمَمْلُوكِ الْمُصْلِحِ أَجْرَانِ ‏”‏ ‏‏ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّي لأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ‏ قَالَ وَبَلَغَنَا أَنَّ أَبَا هُرَيْرَةَ لَمْ يَكُنْ يَحُجُّ حَتَّى مَاتَتْ أُمُّهُ لِصُحْبَتِهَا‏ قَالَ أَبُو الطَّاهِرِ فِي حَدِيثِهِ ‏”لِلْعَبْدِ الْمُصْلِحِ”‏‏ وَلَمْ يَذْكُرِ الْمَمْلُوكَ


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ الأُمَوِيُّ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ بَلَغَنَا وَمَا بَعْدَهُ

“ஒருவருக்குச் சொந்தமான நற்குணமுள்ள அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.


குறிப்புகள் :

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு, “அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஹஜ்ஜும் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்” என்றார்கள்.

“தம் தாயாரு(க்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற அவரு)டனேயே இருந்ததால், தாயார் இறக்கும்வரை அபூஹுரைரா (ரலி) (கூடுதலான) ஹஜ்ஜுக்குக்கூடச் செல்லவில்லை என நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) கூறினார்.

அபுத்தாஹிர் அஹ்மத் பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருவருக்குச் சொந்தமான …” எனும் குறிப்பு இன்றி, “ …நல்ல அடிமைக்கு …” என்று இடம்பெற்றுள்ளது.

அபூஸஃப்வான் அல் அமவீ (ரஹ்) வழி அறிவிப்பில்.  ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) குறிப்பிட்ட அபூஹுரைரா (ரலி) பற்றிய குறிப்பும் அதற்குப் பின்னுள்ளவையும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 27, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3142

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “إِنَّ الْعَبْدَ إِذَا نَصَحَ لِسَيِّدِهِ وَأَحْسَنَ عِبَادَةَ اللَّهِ فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ”‏


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، وَهْوَ الْقَطَّانُ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي أُسَامَةُ، جَمِيعًا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ ‏

“தம் உரிமையாளருக்கு விசுவாசமாக நடந்து, அல்லாஹ்வையும் நன் முறையில் வழிபடுகின்ற அடிமைக்கு இரு முறை நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)