அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3158

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ:‏

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلِ بْنِ زَيْدٍ، وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيَّيْنِ، ثُمَّ مِنْ بَنِي حَارِثَةَ خَرَجَا إِلَى خَيْبَرَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ يَوْمَئِذٍ صُلْحٌ وَأَهْلُهَا يَهُودُ فَتَفَرَّقَا لِحَاجَتِهِمَا فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ فَوُجِدَ فِي شَرَبَةٍ مَقْتُولاً فَدَفَنَهُ صَاحِبُهُ ثُمَّ أَقْبَلَ إِلَى الْمَدِينَةِ فَمَشَى أَخُو الْمَقْتُولِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَأْنَ عَبْدِ اللَّهِ وَحَيْثُ قُتِلَ فَزَعَمَ بُشَيْرٌ وَهُوَ يُحَدِّثُ عَمَّنْ أَدْرَكَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لَهُمْ ‏”تَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا وَتَسْتَحِقُّونَ قَاتِلَكُمْ‏”‏ أَوْ ‏”‏صَاحِبَكُمْ‏”‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا شَهِدْنَا وَلاَ حَضَرْنَا ‏‏ فَزَعَمَ أَنَّهُ قَالَ ‏”فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ‏”‏ ‏‏ فَقَالُوا “يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ” فَزَعَمَ بُشَيْرٌ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَقَلَهُ مِنْ عِنْدِهِ ‏.‏


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ مِنْ بَنِي حَارِثَةَ يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ انْطَلَقَ هُوَ وَابْنُ عَمٍّ لَهُ يُقَالُ لَهُ مُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ اللَّيْثِ إِلَى قَوْلِهِ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ ‏.‏ قَالَ يَحْيَى فَحَدَّثَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ قَالَ أَخْبَرَنِي سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ قَالَ لَقَدْ رَكَضَتْنِي فَرِيضَةٌ مِنْ تِلْكَ الْفَرَائِضِ بِالْمِرْبَدِ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا بُشَيْرُ بْنُ يَسَارٍ الأَنْصَارِيُّ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ نَفَرًا مِنْهُمُ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلاً ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُبْطِلَ دَمَهُ فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அன்ஸாரிகள் என்றும் பின்னர் பனூ ஹாரிஸா குலத்தார் என்றும் அறியப்பட்டவர்களான அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபருக்குப் புறப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் கைபர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பகுதியாயிருந்தது. யூதர்களே அங்கு வசித்துவந்தார்கள். (அங்குச் சென்றதும்) அவர்கள் இருவரும் தம் இயற்கைத் தேவைக்காகப் பிரிந்துசென்றனர்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டு (அத்தோட்டத்திலுள்ள) ஒரு தண்ணீர் தொட்டியில் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) கண்டார்கள். உடனே முஹய்யிஸா (ரலி) அவரை (எடுத்து) அடக்கம் செய்துவிட்டு, மதீனாவுக்கு வந்தார்கள். கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் (உறவினர்களான) முஹய்யிஸா (ரலி) மற்றும் ஹுவய்யிஸா (ரலி) ஆகியோரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்துல்லாஹ் (ரலி) அவர்களைப் பற்றியும் அவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஐம்பது பேர்  (அப்துல்லாஹ்வை இன்னவர் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து, நீங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு) பெறும் உரிமையை அல்லது உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை எடுத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நிகழ்வு நடந்த இடத்தில் நாங்கள் இருக்கவுமில்லை; அதைப் பார்க்கவும் இல்லையே!” என்று கேட்டார்கள்.

“அப்படியானால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிப்பார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?” என்று கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே அப்துல்லாஹ்வின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர் : புஷைர் பின் யஸார் (ரஹ்)


குறிப்புகள் :

ஹுஷைம் (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகளில் பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) எனக் கூறப்படும் ஒருவரும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் எனக் கூறப்படும் அவருடைய தந்தையின் சகோதரர் ஒருவரும் (கைபருக்குச்) சென்றார்கள் …” என்று ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்று, “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே கொல்லப்பட்டவருக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்” என்பதுவரை இடம்பெற்றுள்ளது.

“பழியீட்டுத் தொகைக்காக வழங்கப்பட்ட ஒட்டகங்களில் ஒன்று, ஒட்டகத் தொழுவத்தில் வைத்து என்னை உதைத்துவிட்டது” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) கூறியதாக யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில் (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.

ஸயீத் பின் உபைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களில் சிலர் கைபருக்குச் சென்றபோது, அங்கு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள் …” என்றும் மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல், தாமே நூறு தர்ம ஒட்டகங்களை பழியீட்டுத் தொகைக்காக வழங்கினார்கள்” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா அல் அன்ஸாரீ (ரலி) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது

Share this Hadith: