அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 505

حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏
‏إِنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏الَّتِي كَانَتْ تَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏شَكَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الدَّمَ فَقَالَ لَهَا ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி), தமது தொடர் குருதிப் போக்கைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்!” என்று அவரிடம் கூறினார்கள். (எனினும்) உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 504

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏
‏إِنَّ ‏ ‏أَمَّ حَبِيبَةَ ‏ ‏سَأَلَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الدَّمِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَأَيْتُ ‏ ‏مِرْكَنَهَا ‏ ‏مَلْآنَ دَمًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ‏

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் குருதிப் போக்கைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று அவரிடம் கூறினார்கள்.

அவர் (நின்று) குளித்து வந்த துணி அலசும் பாத்திரத்தில் குருதி நிரம்பியிருக்க நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 503

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏خَتَنَةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّ هَذَا ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي وَصَلِّي ‏
‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَكَانَتْ تَغْتَسِلُ فِي ‏ ‏مِرْكَنٍ ‏ ‏فِي حُجْرَةِ أُخْتِهَا ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏فَقَالَ يَرْحَمُ اللَّهُ ‏ ‏هِنْدًا ‏ ‏لَوْ سَمِعَتْ بِهَذِهِ الْفُتْيَا وَاللَّهِ إِنْ كَانَتْ ‏ ‏لَتَبْكِي لِأَنَّهَا كَانَتْ لَا تُصَلِّي ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِى ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏جَاءَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَتْ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏إِلَى قَوْلِهِ تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَةَ جَحْشٍ ‏ ‏كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டு காலமாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது மாத விடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, நீ (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

“உம்மு ஹபீபா (ரலி), தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார். அவர் குளிக்கும் நீரின் நிறத்தை அவரது குருதியின் நிறம் மிகைத்திருக்கும்” என்று அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) கூறினார்.

“நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது, “(அபூஸுஃப்யானின் மனைவி) ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக, இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அழுது விடுவார். ஏனெனில், (தொடர் குருதிப் போக்காளியான) ஹிந்தா தொழாமல் இருந்து வந்தார்” என்று அபூபக்ர் (ரஹ்) கூறியதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பு, “பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது” எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 502

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏
‏اسْتَفْتَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ إِنَّمَا ‏ ‏ذَلِكِ ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏
‏قَالَ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏ابْنَةُ جَحْشٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் தொடர் குருதிப் போக்குடையவள்” எனக் கூறித் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது ஒருவகை சிரைக் குருதி நோயாகும். எனவே (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்தவுடன்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” எனக் கூறினார்கள். என்றாலும் உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கு(முன்னரு)ம் குளிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), “உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று கூறவில்லை. மாறாக, உம்மு ஹபீபா தாமாகவே அவ்வாறு செய்து வந்தார் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் ஸஅத் (ரஹ்) கூறுகின்றார்.

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் நபித்தோழியின் ‘உம்மு ஹபீபா’ எனும் பெயர் இல்லாமல் ‘ஜஹ்ஷின் மகள்’ என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 501

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ فَقَالَ لَا إِنَّمَا ‏ ‏ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏
‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَإِسْنَادِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ أَسَدٍ ‏ ‏وَهِيَ امْرَأَةٌ مِنَّا ‏ ‏قَالَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏زِيَادَةُ حَرْفٍ تَرَكْنَا ذِكْرَهُ ‏

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் குருதிப் போக்குடையவளாக இருக்கிறேன். (குருதிப் போக்கிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டு விடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது. ஏனெனில், அது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, (வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்து விட்டால் குருதியைக் கழுவி(, குளித்து) விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

ஜரீர் (ரஹ்) வழியாக குதைபா (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில், “ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அஸத் (ரலி) (நபியவர்களிடம்) வந்தார். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார்” எனும் கூடுதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “குருதியைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள்” என்று கூடுதலாக ஒரு வரி காணப்படுகிறது. ஆயினும் (ஹம்மாத் மட்டுமே இதை அறிவிப்பதால்) அதை நாம் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம் என முஸ்லிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.