அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 506

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ الرِّشْكِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏أَنَّ ‏
‏امْرَأَةً سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَتَقْضِي إِحْدَانَا الصَّلَاةَ أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كَانَتْ إِحْدَانَا تَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ لَا تُؤْمَرُ بِقَضَاءٍ ‏

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுப்பட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் மாதவிடாய் ஏற்படும் ஒருவள், தொழுகைகளை மீட்குமாறு கட்டளையிடப் பட்டதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்).