அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 511

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُوسَى الْقَارِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ ‏
‏وَضَعْتُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَاءً وَسَتَرْتُهُ فَاغْتَسَلَ ‏

“நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்து விட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக் கொண்டேன்; அவர்கள் குளித்தார்கள்” என மைமூனா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 510

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَقِيلٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏حَدَّثَتْهُ أَنَّهُ ‏
‏لَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ بِأَعْلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى غُسْلِهِ فَسَتَرَتْ عَلَيْهِ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ ‏ ‏سُبْحَةَ ‏ ‏الضُّحَى ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَسَتَرَتْهُ ابْنَتُهُ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏بِثَوْبِهِ فَلَمَّا اغْتَسَلَ أَخَذَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ قَامَ فَصَلَّى ثَمَانَ سَجَدَاتٍ وَذَلِكَ ضُحًى ‏

நான் மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி), திரையிட்டு மறைத்தார். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக் கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி).

குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ் ஸயீத் பின் அபில் ஹிந்த் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக் கொண்டார்கள். குளித்து முடிந்தபின் அந்த ஆடையை வாங்கி நபி (ஸல்) போர்த்திக் கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 509

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏تَقُولُ ‏
‏ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏وَفَاطِمَةُ ‏ ‏ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ ‏

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தார்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி).