அத்தியாயம்: 13, பாடம்: 21, ஹதீஸ் எண்: 1919

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ بْنِ لَاحِقٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ ذَكْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ‏ ‏قَالَتْ ‏

‏أَرْسَلَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏الَّتِي حَوْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ فَكُنَّا بَعْدَ ذَلِكَ نَصُومُهُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا الصِّغَارَ مِنْهُمْ إِنْ شَاءَ اللَّهُ وَنَذْهَبُ إِلَى الْمَسْجِدِ فَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ ‏ ‏الْعِهْنِ ‏ ‏فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهَا إِيَّاهُ عِنْدَ الْإِفْطَارِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَعْشَرٍ الْعَطَّارُ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ ذَكْوَانَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏الرُّبَيِّعَ بِنْتَ مُعَوِّذٍ ‏ ‏عَنْ صَوْمِ عَاشُورَاءَ ‏ ‏قَالَتْ ‏ ‏بَعَثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رُسُلَهُ فِي قُرَى ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏بِشْرٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَنَصْنَعُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ ‏ ‏الْعِهْنِ ‏ ‏فَنَذْهَبُ بِهِ مَعَنَا فَإِذَا سَأَلُونَا الطَّعَامَ أَعْطَيْنَاهُمْ اللُّعْبَةَ تُلْهِيهِمْ حَتَّى يُتِمُّوا صَوْمَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி “(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்; நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
அதன் பின்னர் அந்நாளில் நாங்கள் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடியபடி- நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, அவர்களில் யாராவது (பசியால்) உணவு கேட்டு அழும்போது அவர்களுக்காகச் செய்து கொண்டு சென்ற, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை நோன்பு துறக்கும் நேரம்வரை (பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.

அறிவிப்பாளர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி)

குறிப்பு : காலித் பின் தக்வான் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள் …‘ என்று கூறினார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.
தொடர்ந்து,
“நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார் செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம்”

Share this Hadith:

Leave a Comment