அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 534

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلَى الصَّلَاةِ فَقَامَ وَطَرَحَ السِّكِّينَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டுகளாக்கி உண்டு கொண்டிருந்தபோது தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியைப் போட்டுவிட்டு (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் உமய்யா அள்ளம்ரீ(ரலி).

குறிப்பு:

இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) இதே ஹதீஸைத் தமக்கு அறிவித்ததாக இபுனு ஷிஹாப் (ரஹ்) குறிப்பிடுகிறார்.