அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 538

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ عَلَيْهِ ثِيَابَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَأُتِيَ بِهَدِيَّةٍ خُبْزٍ وَلَحْمٍ فَأَكَلَ ثَلَاثَ لُقَمٍ ثُمَّ صَلَّى بِالنَّاسِ وَمَا مَسَّ مَاءً ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏قَالَ كُنْتُ مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ حَلْحَلَةَ ‏ ‏وَفِيهِ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏شَهِدَ ذَلِكَ مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ صَلَّى وَلَمْ يَقُلْ بِالنَّاسِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுக்காக ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்காகத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் (மீண்டும் உளூச் செய்வதற்காகத்) தண்ணீரைத் தொடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது இதே போன்ற ஹதீஸை அவர்கள் அறிவித்தார்கள். மேற்காணும் நிகழ்வில், நபி (ஸல்) அவர்களுடன் தாம் இருந்ததாகவும் கூறினார்கள்” என முஹம்மது பின் அம்ரு பின் அதா (ரஹ்) குறிப்பிடுகிறார். அந்த அறிவிப்பில், “மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்” என்று இல்லாமல் “தொழுதார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment